ரோகித் கோலி பும்ரா இந்திய அணியை விட்டு தற்காலிக ஓய்வு.. நியூசி போட்டிக்கு பின்பாக அவசர முடிவு.. என்ன காரணம்?

0
33717
ICT

இந்திய அணி நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக தரம்சாலா மைதானத்தில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளைப் பதிவு செய்து, ஏறக்குறைய அரை இறுதி வாய்ப்பையும் உறுதி செய்து அசத்தியிருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணி அடுத்த போட்டியை லக்னோ மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு எதிராக அக்டோபர் 29ஆம் தேதி விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் இந்திய அணி முகாமில் இருந்து விலகி சென்று இருக்கிறார்கள்.

அடுத்த போட்டி நடைபெறுவதற்கு ஒரு வார காலம் இருக்கின்ற காரணத்தினால், இந்திய அணி வீரர்கள் சில நாட்கள் தங்கள் குடும்பத்துடன் செலவிட செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்திய அணி கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் ஆசியக் கோப்பைக்கான பயணத்தில் இருந்தது. இதற்கு அடுத்து இந்திய அணி உலகக்கோப்பை தயாரிப்புகளில் ஈடுபட்டு, மேற்கொண்டு இந்தியாவின் பல மைதானங்களுக்கு பயணம் செய்து விளையாடி வருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக கிடைத்திருக்கும் ஏழு நாள் இடைவெளியில் வீரர்கள் தங்கள் நேரத்தை குடும்பத்தாருடன் செலவிடுவதற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அனுமதி அளித்தது சிறப்பான விஷயமாக கருதப்படுகிறது.

மேலும் இந்திய அணி வழக்கம்போல் லக்னோ போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக வலையில் பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் காயம் அடைந்துள்ள ஹர்திக் பாண்டியா தற்பொழுது பெங்களூரில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அங்கிருந்து நேரடியாக இந்திய அணியுடன் லக்னோவில் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை வென்றால் நேராக அரை இறுதிக்குள் நுழையும். இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை விட்டு ஏறக்குறைய வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது!