“ரோகித் வேற லெவல்.. கோலியும் பாபரும் ஒன்னு.. அவங்க எதையும் ஜெயிச்சது கிடையாது!” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் சர்ச்சை பேச்சு!

0
928
Virat

பெரிய எதிர்பார்ப்புகளுடன் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 9 லீக் போட்டிகளில் நான்கை மட்டுமே வென்று பரிதாபமாக தொடரை விட்டு வெளியேறியது.

கடைசியாக மூன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் அவர்களது ரசிகர்களையும் கிரிக்கெட் அமைப்பையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி உள்நாட்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை அதிக அளவில் விளையாடிய வெற்றிகளை குவித்து, ஐசிசி தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறி, அவர்கள் நாட்டு கிரிக்கெட் அமைப்பையும் ரசிகர்களையும் பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருந்தது.

ஆனால் அவர்கள் ஆசிய கோப்பை தொடருக்கு பாகிஸ்தானை தாண்டி வந்த பிறகு, பாகிஸ்தான் அணியால் எதையும் செய்ய முடியவில்லை.அவர்கள் பல அதிர்ச்சிகரமான தோல்விகளை சந்தித்தார்கள். இது அந்த நாட்டு ரசிகர்களை மிகுந்த கோபத்திற்கும் உள்ளாக்கி இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் பாபர் அசாமை விராட் கோலி உடன் ஒப்பிட்டு அக்குப் ஜாவித் பேசியுள்ள விஷயம் இந்தியத் தரப்பில் சர்ச்சையான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஐயோ பாபரை பற்றி எதுவும் சொல்லாதே என்கிறார்கள். ஆனால் ஒரு கேப்டனாக அவர் எதையாவது பெரிய விஷயங்களை வென்று இருக்கிறாரா? ஏன் ரோஹித் சர்மா ஒரு நல்ல கேப்டனாக இருக்கிறார். அவர் ஐபிஎல் தொடரில் 5 பட்டங்களை வென்று இருக்கிறார். ஆனால் விராட் கோலி ஐபிஎல் தொடரிலும் இந்திய அணிக்காகவும் பெரிய தொடர்களை எதையும் வென்றது கிடையாது.

சர்ப்ராஸ் அகமத் 2006 இல் அண்டர் 19 உலக கோப்பையை வென்றார். பின்பு 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றார். அவர் பிஎஸ்எல் தொடரில் குவெட்டா அணியை வெல்ல வைத்திருக்கிறார். எந்த நிலையிலும் பாபர் தன்னுடைய நல்ல கேப்டன் பார்வையை காட்டியது கிடையாது.

ஆனால் ஷாகின் இரண்டு முறை பிஎஸ்எல் தொடரில் கோப்பையை வென்றிருக்கிறார். பிஎஸ்எல் தொடரில் இருந்துதான் நாம் பாகிஸ்தான் அணியை தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஆனால் அங்கிருந்து நாம் கேப்டனை தேர்ந்தெடுக்கவில்லை. ஆம் அங்கிருந்துதான் கேப்டனையும் தேர்ந்தெடுக்க வேண்டும். பாபர் கேப்டன் பதவிக்கு நியாயம் செய்யவில்லை என்பதை உணர வேண்டும்.

இப்போது இவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் தோற்று வரும் பொழுது இவர்களை விமர்சிக்க கூட முடியாது. ஆனால் 96 ஆம் ஆண்டு நாங்கள் உலகக் கோப்பையில் தோற்று நாடு திரும்பிய பொழுது, நான் உயிர் தப்பியது மிகப்பெரிய விஷயமாக இருந்தது. பாபர் கேப்டன் பகுதியில் இருந்து மாற்றப்பட வேண்டியவர்!” என்று கூறி இருக்கிறார்!