“”ரோகித் வேற மாதிரி கேப்டன்.. எல்லா பவுலருக்கும் பெரிய தலைவலியா இருக்காங்க” – இங்கிலாந்து நாசர் ஹூசைன் சொன்ன சூப்பர்  இன்ஃபர்மேஷன்!

0
3733
Rohit

இந்திய அணி நடப்பு உலகக் கோப்பையில் தான் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வென்று தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது.

இந்த முறை இந்திய அணி மூன்று துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு, போட்டியில் எதிரணிகள் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பையே தருவதில்லை.

- Advertisement -

நான்கு போட்டிகளிலும் முதலில் பந்து வீசிய இந்திய அணி, எதிரணியின் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்கி விடுகிறார்கள்.

இதற்கடுத்து பேட்டிங் செய்ய வரும் இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அட்டாக்கிங் கேம் விளையாடி, அடுத்து வரக்கூடிய மற்ற பேட்ஸ்மேன்களுக்கான சிரமத்தை இன்னும் குறைத்து விடுகிறார். இப்படி இந்திய அணி ஒட்டுமொத்தமாக மிகச் சிறப்பாக செயல்படுகிறது.

இது குறித்து பேசி உள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ” எனக்கு இந்திய அணி இடம் மிகவும் பிடித்த விஷயம் அவர்களிடம் உண்மையான இன்டெண்ட் இருக்கிறது. கடந்த டி20 உலக கோப்பையில் அவர்கள் கொஞ்சம் பயம் தரும் விளையாட்டை விளையாடினார்கள். பின்பு இங்கிலாந்து அணியிடம் அரையிறுதியில் தோற்றார்கள். இது மட்டும்தான் வித்தியாசமாக தெரிகிறது. இந்தியாவின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் மற்ற அணிகளின் டாப் பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறார்கள்.

- Advertisement -

ரோகித் சர்மா இதுவரை இல்லாத சிறந்த வெள்ளைப்பந்து பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவர் உலக கோப்பைகளில் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். சமீபத்தில் ஒரு கிராப்ட் காட்டினோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரோஹித் சர்மா புல் ஷாட்டில் 400 ரன்கள் குவித்திருக்கிறார்.

ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு பந்துவீச்சாளரை நீங்கள் இழக்கும் பொழுது நீங்கள் பந்துவீச்சு குறித்து யோசிக்க வேண்டும். குல்தீப் நன்றாக பந்து வீசினார். அடுத்து சிராஜ் கிராஸ் சீமில் திரும்பி வர, அவரை சரியான இடத்தில் பயன்படுத்தினார். இதற்கு அடுத்து குல்தீப், பும்ரா, ஜடேஜா ஆகியோரிடம் திரும்பினார்.

அவர் தனது பந்துவீச்சாளர்களை சிறப்பாக சுழற்றினார். வர்ணனையில் தினேஷ் கார்த்திக் கூறியது போல இது வெறும் பந்துவீச்சாளர் சுழற்சி மட்டும் கிடையாது. அவர் எப்போதும் பந்துவீச்சாளர்களை மாற்றி ஒரு விக்கெட்டை எடுப்பார். எனவே அவரது பேட்டிங் போலவே கேப்டன்ஷியிலும் தாக்குதல் பாணியில் செயல்படுகிறார்!” என்று கூறியிருக்கிறார்!