ரோகித் சர்மா நேக்கா ஒரு பிளேயரை ஓரம் கட்டிட்டாரு – முன்னாள் வீரர் சாடல்!

0
8702

நியூசிலாந்து தொடர் முடிந்தபின் இப்படிப்பட்ட ஒரு வீரரை பற்றி ரோகித் ஏன் பேசவில்லை? ஏன் ஓரம் காட்டுகிறார்? என சஞ்சய் மஞ்ரேக்கர் கேள்வி எழுப்பினார்.

நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது. இந்த தொடரில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் இந்திய அணி கலக்கியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பேட்டிங்கில் அசத்திய கில், மூன்று போட்டிகளில் 360 ரன்கள் விளாசி சில சாதனைகளையும் படைத்தார். இரட்டை சதம் மற்றும் சதம் விலாசிய இவருக்கு தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது.

பந்துவீச்சில் முதல் இரண்டு போட்டிகளில் அசத்திய முகமது சிராஜ் மற்றும் சமி இருவரும் மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது வெளியில் அமர்த்தபட்டனர். ஆனாலும் முதல் இரண்டு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகள் மற்றும் நான்கு விக்கெட்டுகள் முறையே கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

3-0 என தொடரை கைப்பற்றிய பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ரோகித் சர்மா, சுப்மன் கில் பற்றி பேசினார். ஆனால் முகமது சிராஜ் பற்றி பெரிதளவில் பேசவில்லை என விமர்சித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர். அவர் கூறியதாவது:

- Advertisement -

“ஆட்டம் முடிந்து பேட்டியளிக்கும் பொழுது முகமது சிராஜ் பற்றி ரோகித் சர்மா பேச்சையே எடுக்க வில்லை. ஏன் அவ்வளவு சிறப்பாக செயல்பட்ட வரை ரோகித் சர்மா குறிப்பிடவில்லை?. இந்த தொடரை வென்று கொடுத்த முக்கியமான வீரர்களில் ஒருவர் பெயரை குறிப்பிட வேண்டும் என்றால் சிராஜ் பெயரை தயக்கமின்றி நான் கூறுவேன். அசாத்தியமாக செயல்பட்டார்.

முதல் போட்டியில் நான்கு விக்கெட்டுகளையும் இரண்டாவது போட்டியில் 6 ஓவர்களில் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

- Advertisement -

இரட்டை சதம் முன்பு இது பெரிதாக தெரியவில்லையா? பேட்டிங் எந்த அளவிற்கு முக்கியமோ, பந்துவீச்சும் அந்த அளவிற்கு முக்கியம் என்பதை ஏன் ரோகித் சர்மா உணரவில்லையா?. சிராஜ் குறிப்பிடவில்லை. இந்த செயல் அவரை ஓரம் கட்டுவது போல இல்லையா? அணியின் கேப்டன் பொறுப்புணர்வுடன் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் பற்றியும் குறிப்பிட்டு பேசினால் தான் வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும். அணியின் ஆரோக்கியத்திற்கும் உதவும்.” என தனது கருத்தை முன்வைத்தார்.