இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளது.
இந்த சூழ்நிலையில் ஐந்தாவது டி20 போட்டியில் பந்துவீசி இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றிய சிவம் தூபே குறித்து இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
ஹர்ஷித் ராணா பந்து வீச அனுமதி
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் விளையாடிய சிவம் தூபே 53 ரன்கள் குவித்த நிலையில் தலையில் ஏற்பட்ட காயத்தால் அதற்குப் பிறகு அவர் பந்து வீச வரவில்லை. இந்திய அணி ஐசிசி விதியை பயன்படுத்தி அவருக்கு மாற்று வீரராக ஹர்ஷித் ராணாவை பந்து வீச கொண்டு வந்தது. ராணா இங்கிலாந்து அணியின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழ்நிலையில் சிவம் தூபேவை விட ஹர்சித் ராணா பந்து வீச்சில் சிறந்தவர் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சுட்டிக்காட்டி இருந்தார். மேலும் நடுவர்கள் பந்து வீச அனுமதித்தது குறித்தும் தனது விமர்சனத்தை தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் ஐந்தாவது டி20 போட்டியில் விளையாடிய தூபே தனது முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றி தன் மீதான விமர்சனத்திற்கு தகுந்த பதிலடி கொடுத்தார். கடைசி போட்டியில் தூபே இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இது குறித்து ராபின் உத்தப்பா சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
சிவம் தூபே அவரை அவுட் ஆக்கினார்
இதுகுறித்து அவர் விரிவாகக் கூறும்போது “இது சர்ச்சைக்கு உண்டான வகையில் இருந்தது என்று நினைக்கிறேன். கெவின் பீட்டர்சன் சிவம் தூபே பந்து வீசுவதை பார்க்க விரும்பினார். ஆனால் தூபே முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அவரை அவுட் ஆகிவிட்டார். இருப்பினும் இந்த சட்டத்தைப் பொறுத்தவரை முழுமையான தெளிவு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பிசிசிஐ இதை கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த சம்பவத்தை பொறுத்தவரை இந்திய அணி ஒரு ஓட்டையை பயன்படுத்தியதாக நான் நினைக்கிறேன்.
இதையும் படிங்க:அபிஷேக் சர்மா சதம் அடிச்சா கவலை இல்லை.. நான் இதை வச்சு என்ன செய்றேன்னு பாருங்க – சுப்மான் கில் பேட்டி
இதில் வெளிப்படையாக போட்டி நடுவரின் ஒப்புதல் இருந்தது. தூபே கடந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவர் ஒரு சரியான ஆல் ரவுண்டர் இருப்பினும் அவர் ஹர்ஷித்ராணாவை விட 20 -25 கிலோமீட்டர் குறைவான வேகத்தில் பந்தை வீசக்கூடியவர். அதனால் ராணா இன்னும் ஒரு நல்ல பந்துவீச்சாளர். சட்டத்தில் என்ன சரியாக நடக்க வேண்டும் என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் இந்திய அணி ஓட்டையை பயன்படுத்தியது. அது நியாயமாக இருந்தாலும் சரி, அல்லது அநியாயமாக இருந்தாலும் சரி சட்டத்திற்கு இன்னும் தெளிவு தேவை என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.