அபிஷேக் சர்மா சதம் அடிச்சா கவலை இல்லை.. நான் இதை வச்சு என்ன செய்றேன்னு பாருங்க – சுப்மான் கில் பேட்டி

0
907

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்ததாக இந்திய அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் அறிவிக்கப்பட்ட இந்திய அணிக்கு இளம் வீரர் சுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில் கில் அபிஷேக் ஷர்மா மற்றும் ஜெய்ஸ்வால் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட கில்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை சிறப்பாக கைப்பற்றி இருந்தது. இதில் ஐந்தாவது டி20 போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அபாரமாக விளையாடி தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். இவரது அதிரடியான ஆட்டத்தால் மற்றொரு இளம் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லின் தொடக்க இடம் கேள்விக்குறியாகியுள்ளது.

அதேபோல டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலும் டி20 தொடரில் விரைவில் களம் இறங்குவதற்கான அறிகுறிகள் இருப்பதால் தங்களுக்கிடையே எந்த நச்சுத்தன்மையும் இருந்ததில்லை எனவும் ஒருவர் சிறப்பாக விளையாடுவதன் மூலமாக மற்றொருவர் உந்துதல் அடைகிறோம் எனவும் துணை கேப்டன் கில் சில முக்கியமான கருத்துக்களை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருக்கிறார்.

- Advertisement -

அபிஷேக் ஷர்மா என் பால்ய நண்பர்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அபிஷேக் ஷர்மா என்னுடைய பால்ய நண்பர் மற்றும் ஜெய்ஸ்வாலும் என்னுடைய மற்றொரு நண்பர் தான். எங்களுக்கிடையே எந்தவிதமான நச்சுப்போட்டியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. வெளிப்படையாக நீங்கள் நாட்டிற்காக விளையாட விரும்புகிறார்கள் என்றால் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட விரும்புகிறீர்கள். மேலும் இந்த நபர் சிறப்பாக செயல்படவில்லை என்று நான் விரும்புகிறேன் என நினைக்க மாட்டீர்கள்.

இதையும் படிங்க:ரோஹித் ஜெய்ஸ்வால் இருந்தும் வேஸ்ட்.. இதனால யங் பிளேயர்ஸ் பாதிக்கப்படுறாங்க – ரஞ்சி குறித்து மும்பை தேர்வாளர்

நீங்கள் நாட்டிற்காகவும் அணிக்காகவும் விளையாடுகிறீர்கள். யார் சிறப்பாக செயல்பட்டாலும், அவர்களுக்காக நன்றாக உணர வேண்டும் அவர்களை வாழ்த்த வேண்டும். இதன் மூலமாக உத்வேகம் அடைய வேண்டும். எனக்கு இப்போது கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது இதனை நான் ஒரு சவாலாக எடுத்துக் கொள்கிறேன். ரோஹித் பாய்க்கு களத்தில் எனது கருத்துக்கள் தேவைப்பட்டால் எனது எண்ணங்களையும், எனது சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்வதில் கடமை என்று உணர்கிறேன்” என்று கூறியிருக்கிறார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற வியாழக்கிழமை முதல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -