தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு பயிற்சியாளர் கம்பீரை குறை சொல்லக்கூடாது என ராபின் உத்தப்பா விமர்சனம் செய்தவர்களை விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் துரத்த முடியாமல் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்ததே தோல்விக்கு காரணம் என பலராலும் விமர்சிக்கப்படுகிறது.
இந்தப் போட்டி நடைபெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் ஆடுகளத்தை தாங்கள் விரும்பியவாறே செய்து கொடுத்தார்கள் என கம்பீர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார். இதன் காரணமாக இப்படிப்பட்ட ஆடுகளத்தை கேட்டு வாங்கியதற்கு கம்பீர் மீது இந்தியா மற்றும் வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்கள்.
இந்த நிலையில் குறிப்பிட்ட ஆடுகளம் பேட்டிங் செய்யவே முடியாத அளவுக்கு மோசமானது கிடையாது, டெஸ்ட் போட்டியை எப்படி விளையாட வேண்டும் என்று இந்திய பேட்ஸ்மேன்கள் மறந்து விட்டதால் ஏற்பட்ட தோல்வி இது, எனவே இந்த விஷயத்தில் நான் கம்பீரை முழுமையாக ஆதரிக்கிறேன் என சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசும்பொழுது ” நேற்று கம்பீரை நான் ஆதரிக்கிறேன் என்று ஒருவர் கூறிய கருத்தை நான் பார்த்தேன். ஆடுகளம் குறித்த விஷயத்தில் கம்பீரை ஆதரிப்பதற்கு என்ன இருக்கிறது? ஏனென்றால் அவர் அந்த ஆடுகளத்தில் விளையாட கிடையாது. விளையாட்டில் நமக்கு வெற்றி தோல்வி பற்றிய முடிவுகள் அவசியமானவைதான். ஆனால் நாம் அதைத் தாண்டி பரந்துபட்டு வெளியில் இருக்கும் நிறைய விஷயங்களை யோசிக்க வேண்டும்”
இதையும் படிங்க : 135 ரன்.. அடுத்த ஜடேஜாவின் அதிரடி பெர்ஃபார்மன்ஸ்.. இந்திய அணி 2வது சுற்றுக்கு தகுதி
“இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ராகுல் டிராவிட் வந்த பொழுது அவரையும் விமர்சனம் செய்தார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வளவு ரன்கள் எடுத்த அவரையே குறை சொல்லும் இவர்கள் யாரை வேண்டுமானாலும் குறை சொல்வார்கள். கொல்கத்தா டெஸ்ட் தோல்விக்கு ஒரு போதும் கம்பீரை குறை சொல்ல முடியாது. வீரர்கள் களத்தில் இறங்கியதும் பயிற்சியாளரின் பங்கு இல்லாமல் போய்விடும். ஒரு போட்டியில் ஏற்படும் தோல்வி வீரர்களால் வருவதுதான்” என்று கூறியிருக்கிறார்.