ஐபிஎல் தொடருக்கு ஏலம் நடத்தப்படக் கூடாது எனவும், மேலும் ஐபிஎல் தொடர் ஆறு மாத காலத்திற்கு நடத்தப்பட வேண்டும் எனவும் ராபின் உத்தப்பா பரபரப்பான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
தற்போது கிரிக்கெட் உலகில் தனியார் டி20 லீக்குகளில் ஐபிஎல் தொடர் யாரும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஒரு டி20 லீக் இருந்தால், அதற்கும் ஐபிஎல் தொடருக்கும் இடையே இருக்கும் தூரம் மிகவும் அதிகம். இதன் காரணமாக ஐபிஎல் இன்னும் பல விஷயங்களில் முன்னேறி செல்ல வேண்டும் என ராபின் உத்தப்பா தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் ஏலம் மற்றும் மினி ஏலம் மேலும் தொடர் நடைபெறும் காலம் என எல்லாவற்றிலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும், குறிப்பாக இங்கிலீஷ் பிரிமியர் லீக் போன்ற பெரிய கால்பந்து தொடர்களில் பின்பற்றப்படும் முறைகள் கொண்டு வரப்பட வேண்டும் என அவர் சூசகமாக தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசும் பொழுது ” ஐபிஎல் குழுவினர் அதை தொடக்க நிலையை தாண்டி அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லவில்லை. இது குழப்பமாக இருக்கிறது. நீங்கள் இப்பொழுது முதிர்ச்சி அடைந்த நிலைக்கு வந்து விட்டீர்கள். எனவே ஏலத்தை நிறுத்திவிட்டு நீங்கள் டிரேடிங் செய்வதை வருடம் முழுவதும் திறந்து வையுங்கள். ஒரு ட்ராப்டை உருவாக்கி ஏலத்தை நீக்கி விடுங்கள். நான் விளையாடும்போது இருந்து இதைச் சொல்லி வருகிறேன் “
“தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக அவர்கள் பொழுதுபோக்கை தாண்டி இன்னும் செல்லாமல் இருக்கிறார்கள். நீங்கள் வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்யும் டிராப்ட் முறையை கொண்டு வந்தால் கூட அதுவுமே உங்களுக்கு பொழுதுபோக்கானதாகத்தான் இருக்கும். மேலும் இரண்டரை மாதங்களுக்கு பதிலாக ஆறு மாத காலம் நடக்க வேண்டும். இந்த ஆறு மாத காலத்தில் இடை இடையில் சர்வதேச போட்டிகளையும் நடத்திக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க : ஆசஸ் இங்கி முதல் டெஸ்ட்.. கெத்தான ஆஸி பிளேயிங் XI.. 31 வயதில் 2 வீரர்கள் அறிமுகம்.. அதிரடி முடிவு
“மும்பை இந்தியன்ஸ் அணி இடம் திறமையை தேடும் சிறப்பான குழு இருக்கிறது. அவர்கள் உள்நாட்டில் மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலும் இந்த குழுவை அனுப்பி இளம் திறமைகளை தேடுகிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் வெற்றிகரமானவர்களாக இருக்கிறார்கள். இவர்களைப் போலவே சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் இருக்கின்றன. இதனால்தான் இந்த அணிகள் வெற்றிகரமாக இருக்கின்றன” என்று கூறி இருக்கிறார்.