“ஐபிஎல்-ல் சேலரி கேப் இல்லனா.. இந்த 4 இந்திய வீரர்களும் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவாங்க” – ராபின் உத்தப்பா பேச்சு

0
170
Uthappa

ஐபிஎல் தொடரை முதலில் சுவாரசியப்படுத்தக்கூடிய விஷயமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு மெகா ஏலம் இருந்து வருகிறது. இதன் மூலம் புதிய புதிய வீரர்களைக் கொண்ட அணி ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் முறையும் உருவாகிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட வீரர்களை மட்டுமே கொண்ட அணிக்கு பதிலாக, மற்ற அணிகளில் விளையாடியவர்களும் கிடைப்பதால் புது சுவாரசியம் கிடைக்கிறது.

மேலும் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அணிகள் செலவு செய்வதற்கான ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்வதின் மூலம், அந்தக் குறிப்பிட்ட தொகைக்குள் சரியான வீரர்களை வாங்கி அணியை உருவாக்க வேண்டும் என்கின்ற சவால் இன்னொரு சுவாரசியத்தை உருவாக்கக் கூடியதாக இருக்கிறது.

- Advertisement -

எனவே ஒவ்வொரு அணிகளுக்கும் ஏலத்தில் பங்கேற்கக் கூடியவர்கள் அதற்கென்று தனியாக திறமை படைத்தவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லையென்றால் ஒரு குறிப்பிட்ட பணத்தை வைத்து, மேலும் தங்களுக்கு தேவையான வீரர்கள் வரும் வரை பணத்தை செலவு செய்யாமல் இருந்து, மற்ற அணிகளுடனும் போட்டியிட்டு வாங்கி நல்ல அணியை உருவாக்குவது என்பது கடினம் ஆகிவிடும்.

குறிப்பாக ஏலத்தில் எவ்வளவு பணம் ஒரு அணி செலவு செய்ய வேண்டும் என்கின்ற கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால், இருக்கின்ற பத்து ஐபிஎல் அணிகளில் யாரால் அதிக விலை கொடுத்து வீரர்களை வாங்கக்கூடிய சக்தி இருக்கிறதோ, அந்த அணி ஐபிஎல் தொடரின் சிறந்த அணியை உருவாக்கி விட முடியும். அவர்களே அதிகப்படியாக கோப்பைகளையும் வெல்லக் கூடியவர்களாக இருப்பார்கள். இதன் காரணமாகத்தான் பிசிசிஐ மிகவும் சமயோசிதமான திட்டங்களை வைத்திருக்கிறது.

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24.75 கோடி கொடுத்து ஆஸ்திரேலிய இடதுகை வேகம் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கை வாங்கி இருக்கிறது. இவருக்கு அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20.50 கோடி கொடுத்து பாட் கம்மின்சை வாங்கி இருக்கிறது. இவர்கள் இருவரும் தான் ஐபிஎல் வரலாற்றில் 20 கோடி தாண்டி ஏலம் போனவர்கள்.

- Advertisement -

இந்திய வீரர்களின் மிக அதிகபட்சமாக யுவராஜ் சிங் 16 கோடி ரூபாய்க்கு 2015 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் வாங்கப்பட்டு இருக்கிறார். இதற்கு அடுத்து 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் இசான் கிஷான் 15.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறார். இவர்கள் இருவரும்தான் இந்திய வீரர்களின் அதிக சம்பளம் ஐபிஎல் தொடரில் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : 3 இந்திய நட்சத்திர வீரர்கள் உடல்தகுதி அறிவிப்பு.. 2 வீரர்கள் ஐபிஎல்-ல் ரூல்ட் அவுட்

தற்பொழுது இதை வைத்து பேசி உள்ள ராபின் உத்தப்பா “ஐபிஎல் தொடரில் சேலரி கேப் முறை இல்லாமல் இருந்தால், விராட் கோலி, ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா நால்வரும் ஐபிஎல் அணிகளால் மிக எளிதாக 100 கோடி ரூபாய்க்கு வாங்கப்படலாம்” எனக் கூறியிருக்கிறார்.