3 இந்திய நட்சத்திர வீரர்கள் உடல்தகுதி அறிவிப்பு.. 2 வீரர்கள் ஐபிஎல்-ல் ரூல்ட் அவுட்

0
1324
Rishabh

இன்றிலிருந்து 17 வது ஐபிஎல் சீசன் தொடங்க சரியாக பத்து நாட்கள் இருக்கிறது. ஐபிஎல் தொடரை எதிர்பார்த்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் சீசன் துவங்கும் பொழுது எந்த வீரர்கள் உடல் தகுதியோடு இருக்கிறார்கள்? யார் காயமடைந்து தொடரில் விளையாடாமல் போவார்கள்? என்பது தனிப்பட்ட கவலைக்குரிய எதிர்பார்ப்பான விஷயமாக இருந்து வரக்கூடிய ஒன்று.

- Advertisement -

சமீபமாக நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணமாக 8 வாரங்கள் ஐபிஎல் தொடருக்குள் வர முடியாது என நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தொடர் நெருங்க நெருங்க சில அதிர்ச்சியான வீரர்களின் காயம் தொடர்பான முடிவுகள் வெளிவருவது வழக்கம். மேலும் ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் போதும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி உடல் தகுதி சான்றிதழ் கொடுக்காமல் பங்கேற்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் தேசிய கிரிக்கெட் அகாடமி ரிஷப் பண்ட், முகமது ச மி மற்றும் பிரசித் கிருஷ்ணா மூவருக்குமான உடல் தகுதி பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதில் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமும் கவலைப்படக்கூடிய விஷயமும் சேர்ந்து அடங்கியிருக்கின்றன.

காலில் காயமடைந்த இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அறுவை சிகிச்சைக்கு பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், எனவே அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதேபோல் மற்றுமொரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக ஐபிஎல் தொடருக்கு கிடைக்க மாட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உலககோப்பை ஜெயித்து கொடுத்த கம்மின்ஸ்க்கே இந்த நிலைமையா!.. ஆஸி கோச் அதிரடி பேட்டி

மிகக்குறிப்பாக ரிஷப் பண்ட் குறித்து அறிவித்துள்ள பிசிசிஐ, அவர் குணமடைந்து விளையாடுவதற்கு முழு தகுதியுடன் இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறது. எனவே அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவது உறுதியாகியிருக்கிறது. ரிஷப் பண்ட் குறித்த அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது.