நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிகள் தோனி பேட்டிங் வரிசையில் அஸ்வினுக்கு அடுத்து ஒன்பதாவது இடத்தில் வந்தது தற்போது பெரிய விமர்சனங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ராபின் உத்தப்பா மற்றும் இர்பான் இருவரும் தங்கள் கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 2008 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றி பெற்று இருந்தது. இதற்கு அடுத்து 17 வருடங்கள் கழித்து தற்பொழுது சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றி அவர்களுக்கு ஒரு வரலாற்று வெற்றியாகவே பதிவாகி இருக்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கேகேஆர் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு எதிராக விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளுமே ஆர் சி பி அணி வெளி மைதானத்தில் விளையாடி வெற்றி பெற்ற போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவும் சிஎஸ்கே வை அதன் சொந்த மைதானத்தில் 17 ஆண்டுகள் கழித்து வென்று இருப்பதாலும் ஆர்சிபி அணிக்கு நல்ல உற்சாகம் கிடைத்திருக்கிறது. இது அவர்களுக்கு மேற்கொண்டு தொடரில் ஆதிக்கம் செலுத்த பெரும் உதவியாக அமையும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். எனவே இந்த முறை ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என கூறுகிறார்கள்.
இப்படியான நிலையில் நேற்று ஓவருக்கு 16 ரன் தேவைப்படும் நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினை அனுப்பி விட்டு பேட்டிங் வரிசையில் ஒன்பதாவது காத்திருந்து வந்த தோனி மீது சி எஸ் கே ரசிகர்களே விமர்சனங்கள் வைக்கும் அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது. இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “நான் தோனி ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்வதற்கு ஆதரவாக இருக்க மாட்டேன். இது அணியின் நலனுக்கு உகந்ததாக இருக்காது” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : தோனி நேத்து சீக்கிரம்தான் பேட்டிங் செய்ய வந்தாரு.. உங்களுக்கு தெரியலையா? – சேவாக் உள்குத்து பேச்சு
இது குறித்து ராபின் உத்தப்பா பேசும்பொழுது “இது ஆர்சிபிக்கு மிகவும் முக்கியமான வெற்றி. சேப்பாக்கம் போன்ற சிஎஸ்கேவின் கோட்டையில் அவர்கள் பெற்ற வெற்றி என்பதால் இந்த ஐபிஎல் தொடரில் அவர்களுக்கு இது பெரிய ஊக்கமாக அமையும். தோனி ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் வருவது அர்த்தமுள்ளதாக இருக்காது. அவர் முன்கூட்டியே வந்திருந்தால் அது இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் ரன் ரேட்டுக்கு உதவி இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.