தோனி நேத்து சீக்கிரம்தான் பேட்டிங் செய்ய வந்தாரு.. உங்களுக்கு தெரியலையா? – சேவாக் உள்குத்து பேச்சு

0
458
Dhoni

நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி சீக்கிரத்தில் பேட்டிங் செய்ய வந்தார் எனக் கூறி வீரேந்தர் சேவாக் நகைச்சுவையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு இரு அணி ரசிகர்கள் தாண்டியும் இருந்தது. இந்த முக்கியமான போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிக மோசமான முறையில் விளையாடி சிஎஸ்கே அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

விமர்சனத்தை உண்டாக்கி இருக்கும் தோனி

தற்போது 43 வது வயதில் சிஎஸ்கே அணிக்கு தோனி தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் பேட்டிங் வரிசையில் மேலே வந்து விளையாடாமல் நேற்று ஒன்பதாவது இடத்தில் வந்தார். இதைத்தொடர்ந்து அணிக்கு தேவைப்படும் பொழுது வந்து விளையாட முடியாத அவர் எதற்காக அணியில் தொடர வேண்டும் என்கின்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.

நேற்று தோனி அஸ்வின் எட்டாவது இடத்தில் களமிறங்கிய பிறகு ஒன்பதாவது இடத்தில் களம் இறங்கினார். அஸ்வின் களம் இறங்கிய போது ஒரு ஓவருக்கு 16 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இந்த நிலையில் ரசிகர்கள் தோனி களத்திற்கு வருவார் என பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் அப்பொழுதும் வரவில்லை.

- Advertisement -

சேவாக் நகைச்சுவையாக விமர்சனம்

இது குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மனோஜ் திவாரியுடன் சேவாக் இணைந்திருந்தார். அப்போது தோனி ஒன்பதாவது இடத்தில் வந்தது குறித்து மனோஜ் திவாரி பேசும்பொழுது “தோனி பேட்டிங் செய்ய வந்தது குறித்து நாங்கள் நேற்று பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அவர் பத்தாவது இடத்தில் வந்தாலும் வருவார் என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருந்தோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க : பல வருஷமா சொல்றேன்.. ஒவ்வொரு நாளும் எங்களை இப்படி சோதிக்குது.. ஆதரவு சுத்தமா இல்ல – சிஎஸ்கே கோச் ஆதங்கம்

இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது ” தோனி உள்ளே வந்த பொழுது 16 ஓவர்கள் முடிந்தது. அவர் பொதுவாக 18 அல்லது 19 ஆவது ஓவரில் விளையாட வருவார். இரண்டு ஓவர்கள் விளையாடுவது மட்டும்தான் அவருடைய நோக்கமாக இருக்கும். இப்படி பார்த்தால் அவர் நேற்று சீக்கிரமாகவே வந்து விட்டார்தானே!” என்று நகைச்சுவையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -