இந்திய கிரிக்கெட்

விராட் கோலி கேப்டனா யுவராஜ் ராயுடுக்கு செஞ்சது தப்புதான்.. என் கருத்து மாறாது – ராபின் உத்தப்பா விளக்கம்

இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி யுவராஜ் சிங் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் விஷயங்களில் சரியாக நடந்து கொள்ளவில்லை என்ற தன் கருத்து நியாயமானது என ராபின் உத்தப்பா மீண்டும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஏற்கனவே ராபின் உத்தப்பா பேசியிருந்ததற்கு விராட் கோலியின் ரசிகர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்து இருந்தார்கள். அந்த விமர்சனங்கள் கொஞ்சம் எல்லை தாண்டிய காரணத்தினால், தான் தனிப்பட்ட முறையில் விராட் கோலியை பேசவில்லை என்றும், தான் பேசியதற்கு பின்னணியில் உள்ள காரணங்கள் என்னவென்று ராபின் உத்தப்பா கூறியிருக்கிறார்.

யுவராஜ் சிங் – அம்பதி ராயுடு விவகாரம்

புற்றுநோயிலிருந்து திரும்பி வந்த யுவராஜ் சிங்குக்கு சரியான முறையில் ஃபேர்வெல் கொடுத்திருக்க வேண்டும், 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 50 ராயுடுவை விளையாட வைத்திருக்க வேண்டும், இந்த இரண்டு விஷயத்திலும் கேப்டனாக விராட் கோலி தவறு செய்துவிட்டார் என்று ராபின் உத்தப்பா பேசியிருந்தார். தற்பொழுது இதற்கு விமர்சனங்கள் வர அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறும் பொழுது “நிறைய பேசப்படுகிறது. அதில் நிறைய தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. நாம் நிதானமாக இருக்க வேண்டும். முதலில் நான் ஒரு மனிதன். உங்களைப் போலவே எனக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. நான் ஒரு நேர்காணலில் விராட் கோலி குறித்து எனக்கு தோன்றிய கருத்துக்களை கூறியிருந்தேன். என் மனதிற்கு தோன்றியதை கூற எனக்கு அனுமதி உண்டு”

- Advertisement -

விராட் கோலி குறித்த விமர்சனம் நியாயமானது

“விராட் கோலி மீது தனிப்பட்ட முறையில் நான் எந்தவித விமர்சனத்தையும் வைக்கவில்லை. கேப்டனாக அவர் இந்த விஷயங்களில் சரியாக செயல்படவில்லை என்று நான் உணர்ந்தேன். எனவே ஒரு கேப்டனாக அவர் என்ன செய்திருக்க வேண்டும் என்பது குறித்து நான் கருத்து தெரிவித்திருந்தேன். உங்களுடைய கருத்தை நான் மதிக்கிறேன். நீங்களும் என்னுடைய கருத்தை மதிக்க வேண்டும்”

இதையும் படிங்க : கம்பீர் செலக்சனில் வைத்த 2 கோரிக்கை.. நிராகரித்த ரோகித் அகர்கர்.. ஹர்திக் சாம்சன் விவகாரம்

“யுவராஜ் சிங் போன்ற ஒரு ஜாம்பவான் வீரரை சரியான முறையில் வழி அனுப்பி இருக்க வேண்டும். நாளை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி எப்படி விளையாடினாலும் அவர்களை சரியான முறையில் வழி அனுப்ப வேண்டியது கடமை. யுவராஜ் சிங்குக்கு அதை கேப்டனாக விராட் கோலி செய்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அம்பதி ராயுடு 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய கருத்து” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by