கம்பீர் செலக்சனில் வைத்த 2 கோரிக்கை.. நிராகரித்த ரோகித் அகர்கர்.. ஹர்திக் சாம்சன் விவகாரம்

0
79
Gambhir

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணி தேர்வில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் வைத்த இரண்டு கோரிக்கைகளை தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் மறுத்துவிட்டதாக பரபரப்பான செய்தி வெளியாக இருக்கிறது.

நேற்று இந்த இரண்டு தொடர்களுக்குமான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் மிக முக்கியமாக சுப்மன் கில் துணை கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கிறார். மேலும் ரிஷப் பண்ட் இரண்டாவது விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டு சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் அமைப்பில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

அணிக்குள் உண்மையில் பிளவா?

இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் பயிற்சியாளர் கேப்டன் மற்றும் தேர்வுக்குழு தலைவர் இடையே ஒற்றுமை இல்லை என செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தன்னைத்தானே டிராப் செய்து கொண்டார்.

இந்த நேரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பயிற்சியாளர் கம்பீர் சில சூடான வார்த்தைகளை பேசி இருந்தார். மேலும் வீரர்களின் செயல்பாடு தொடர்பாக நேர்மையாக என்ன கூற வேண்டுமோ அதை வீரர்களுடன் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று ரோகித் சர்மா தனக்கும் கம்பீருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது செய்திகள் வேறு விதமாக வெளி வருகின்றன.

- Advertisement -

கம்பீர் வைத்த இரண்டு கோரிக்கைகள்

நேற்று மதியம் 12:30 மணிக்கு வெளியாக வேண்டிய இந்திய அணி அறிவிப்பு மதியம் சுமார் 3 மணி அளவில் வெளியானது. இந்த தாமதத்திற்கு பின்னால் கம்பீர் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவையும், இரண்டாவது விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டையும் கேட்ட விவகாரம் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சாம்சன் நீங்க நினைக்கிறப்ப கேரளா டீம்ல ஆட முடியாது.. மரியாதையே இல்லையா – KCA தலைவர் விமர்சனம்

கம்பீர் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை கொண்டு வர வேண்டும் என்று கேட்டதை உடனடியாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா மறந்துவிட்டதாகவும், அடுத்து இரண்டாவது விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இருக்க வேண்டும் என்று கேட்டதை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக மீண்டும் இந்திய அணியில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.

- Advertisement -