இந்திய கிரிக்கெட்

பாகிஸ்தான் டிரெஸ்ஸிங் ரூமில் கசிந்த விஷயங்கள்.. ரிஸ்வான் இமாம் விசாரணைக்கு அழைப்பு – புதிய பரபரப்பு

​பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகிய இருவருக்கும், நாட்டின் தேசிய சைபர் க்ரைம் விசாரணை ஏஜென்சி முறைப்படி நோட்டீஸ் அனுப்பி சம்மன் வழங்கி உள்ளது.

- Advertisement -

​இங்கிலாந்து தொடரின் போது பாகிஸ்தான் அணியின் டிரஸ்ஸிங் ரூம் தகவல்கள் வெளியானது குறித்த விசாரணையில், இரு வீரர்களின் மொபைல் போன்களையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பறிமுதல் செய்து விசாரணை அமைப்பிடம் ஒப்படைத்துள்ளது.

​இந்த விவகாரத்தில் மூன்றாவது கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த சர்ச்சை குறித்து பிசிபி அதிகாரப்பூர்வ கருத்து எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

​இந்த விசாரணை குறித்து பிசிபி ஊடக இயக்குனர் ஆமிர் மிர் கூறும்போது “சமீபத்தில் ஊடகங்களில் வெளியான ஒழுக்கமின்மை தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து, வாரியம் தனியாக உள்நாட்டு டிசிப்ளினரி விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர் “இத்தகைய விவகாரங்களை பிசிபி தனது நிலையான விதிகள் மற்றும் நடைமுறைகளின்படியே கையாளும். அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களின் கருத்துகளையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறி முடித்துள்ளார்.

- Advertisement -
Published by