இந்திய கிரிக்கெட்

என் அனுபவம்தான் சூரியவன்சி வயது.. பையன் ஜாலியா சிரிச்சுக்கிட்டே இதை சொல்றான் – முகமது ஷமி பேட்டி

​துலீப் ட்ராபி தொடரின் ஃபைனல் போட்டியில் ஈஸ்ட் ஜோன் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்த அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் சுவாரஸ்யமான கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

​ஈஸ்ட் ஜோன் அணியின் இந்த வெற்றிக் பிரச்சாரத்தில் பல இளம் வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்குப் பங்களிப்பு செய்துள்ளனர். மூத்த வீரர்கள் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அணியை வழிநடத்தியுள்ளனர்.

​தனது 100வது ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டியில் விளையாடிய அந்த சீனியர் பௌலர், அணியில் உள்ள இளம் வீரர்களின் மெச்சூரிட்டி மற்றும் அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

​வைபவ் சூர்யவன்ஷி பற்றி முகமது ஷமி பேசும்போது “நான் இந்த அனுபவத்தை மிகவும் என்ஜாய் செய்தேன். எங்கள் அணியில் இருக்கும் அந்தப் பையன் வைபவ் சூர்யவன்ஷிக்கு எனது கிரிக்கெட் கரியரின் அதே வயதுதான் இருக்கும். அவனிடம் அந்த இளமையின் இன்னசென்ஸ் இருக்கிறது, ஜாலியாக ஜோக் அடித்துக் கொண்டு விஷயங்களை விரைவாகக் கற்றுக் கொள்கிறான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர் “இன்றைய இளம் வீரர்கள் ஐபிஎல் போன்ற ஹை பிரஷர் தொடர்களில் விளையாடுவதால் அவர்கள் ஏற்கனவே மிகவும் மெச்சூரிட்டியாக இருக்கிறார்கள், அவர்களுக்கு அதிகம் ஓவர் கோச்சிங் செய்ய வேண்டியதில்லை. ஆனால் கேம் கஷ்டமாக மாறும் போது மட்டும் நாம் உள்ளே சென்று டாக்டிக்கல் இன்புட்ஸ் கொடுத்து அவர்களை ஃபைட் செய்ய வைக்க வேண்டும்” என்று கூறி முடித்துள்ளார்.

- Advertisement -
Published by