முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2வது சாலை பாதுகாப்பு உலக தொடருக்கான தேதிகள் அறிவிப்பு

0
384
Road Safety World Series

2020 ஆம் ஆண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அனைத்து மக்களுக்கும் ஏற்பட வேண்டும் என்கிற நல்லெண்ண அடிப்படையில் சாலை பாதுகாப்பு உலக தொடர் ( ரோட் சேப்டி வேர்ல்ட் சீரியஸ் ) துவங்கப்பட்டது. மொத்தமாக ஏழு நாடுகள் அதாவது இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் போன்ற அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடின. அனைத்து அணிகளிலும் ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்று விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரின் முதல் பதிப்பு மார்ச் 7ஆம் தேதி 2020 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 11ம் தேதி 2020 ஆம் ஆண்டு வரையில் நடத்தப்பட்டது.ஒரு சில தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக இந்த தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

- Advertisement -

பின்னர் மீண்டும் கடந்த ஆண்டு மார்ச் ஐந்தாம் தேதி துவங்கப்பட்டு மார்ச் 21ம் தேதி வரையில் வெற்றிகரமாக முதல் பதிப்பு நடத்தி முடிக்கப்பட்டது. முதல் பதிப்பில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. முதல் பதிப்பின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்திய அணி இப்போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் சாலை பாதுகாப்பு உலக தொடரின் சாம்பியனாக வலம் வந்தது.

இரண்டாவது சாலை பாதுகாப்பு உலக தொடர் குறித்த அப்டேட்

கடந்தாண்டு முதல் பதிப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் இந்த ஆண்டு இரண்டாவது பதிப்பு வருகிற ஜூன் மாதம் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கின்றது. ஜூன் மாதம் 4ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 3ஆம் தேதி வரையில் சாலை பாதுகாப்பு உலக தொடரின் 2வது பதிப்பு நடைபெற இருக்கின்றது.

இத்தொடர் லக்னோ, இன்டோர் மற்றும் ஜோத்பூர் ஆகிய நகரங்களில் நடைபெறப் போவதாக கூடுதல் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. மேலும் இத்தொடர் குறித்த பல தகவல்கள் இனி வரும் நாட்களில் அதிக அளவில் வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

- Advertisement -
முதல் பதிப்பின் முடிவில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள்

நடந்து முடிந்த முதல் பதிப்பில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் திலகரத்னே தில்ஷன் 271 ரன்கள் முதலிடத்தில் இருக்கிறார். 2வது இடத்தில் உபுல் தரங்கா 237 ரன்களுடனும், 3வது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 233 ரன்களுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதைப்போல முதல் பதிப்பின் முடிவில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் திலகரத்ன தில்ஷன் 12 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும் யூசப் பதான் 9 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், முனாஃப் பட்டேல் 9 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.