விராட் கோலி குறித்து ட்வீட் செய்த ரியான் பராக் – கோபத்தில் விராட் ரசிகர்கள்

0
1789
Virat Kohli and Riyan Parag

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடி வருகிறது. முதல் போட்டி டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் டிராவில் முடிந்தது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்டுக்கு தலைவலி வரும் விதமாக இந்திய துவக்க வீரர்கள் சிறப்பாக ஆடினர். குறிப்பாக ரோகித் அதிரடியாக சாம் குர்ரனின் ஓவரில் 4 பவுண்டரிகளை அடித்து அசத்தினார். ரோகித் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டாலும் மற்றொரு தொடக்க வீரர் ராகுல் அருமையாக ஆடி சதம் கடந்தார். இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் கடந்தவர் என்ற சிறப்பான சாதனையை படைத்தார் ராகுல்.

துவக்க வீரர்கள் சிறப்பாக ஆடி கொடுத்ததை மிடில் ஆர்டர் வீரர்கள் சரியாக பயன்படுத்தாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக புஜாரா மற்றும் ரகானே இந்த முறையும் ஏமாற்றத்தையே கொடுத்தனர். கேப்டன் விராத் கோலி கேஎல் ராகுல் உடன் இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும், முன்புபோல் சரளமாக ரன்கள் சேர்க்க இயலாமல் தவித்தார். 42 ரன்களில் ஆடக்கூடாது ஷாட் ஆடி மோசமான முறையில் ஆட்டமிழந்தார் விராட் கோலி. அதுவும் சரியாக ஆட்ட நேரம் முடியும் நேரத்தில் அவுட் ஆனதால் விரக்தியின் உச்சத்திற்கு சென்று விட்டனர் ரசிகர்கள்.

- Advertisement -

விராட் கோலி குறித்து ட்வீட் செய்த ரியான் பராக்

இந்த நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரும் இந்தியாவுக்காக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஆடிய வருமான ரியான் பராக் ட்வீட் ஒன்று இணையத்தில் வைரல் ஆனது. அதில் பட்டன் அணிந்து காலரை இறக்கி வைத்திருக்கும் விராட்கோலி முன்பு போன்ற ஒரு உணர்வை தருவது இல்லை என்று குறிப்பிட்டிருந்தார் இதை பார்த்ததும் ரசிகர்கள் பலரும் விராட் கோலியை அவர் கேலி செய்வதாக நினைத்து திட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால் முன்புபோல் விராட் கோலி ஆக்ரோஷமாக ஆடாமல் ஆட்டத்தின் தன்மையை உணர்ந்து பொறுமையாக ஆடுகிறார் என்பதை குறிப்பிட்டிருந்தார், ரியான் பராக்
ரசிகச் சண்டைகள் மிகுந்த இந்த நாட்களில் இந்த ட்வீட் பெரும் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் 264 ரன்களை முதல் இன்னிங்சில் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர்களை வேகமாக அவுட்டாகும் கட்டத்தில் இந்த டெஸ்ட் போட்டியை வெற்றியுடன் இந்திய அணி முடிக்கலாம்.

- Advertisement -