இங்கிலாந்தில் தங்க வீடில்லாமல் தவித்த ஏழை ஒருவருக்கு உதவி செய்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்றுள்ள ரிஷப் பண்ட்

0
216

நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் 5வது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கின்றது. டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினர். லெய்செஸ்டர்ஷிர் அணிக்கு எதிராக அவர்கள் ஆடிய பயிற்சி ஆட்டம் சமனில் முடிவடைந்தது.

லெய்செஸ்டர்ஷிர் அணியில் ரிஷப் பண்ட், முகமது ஷமி, பும்ரா, சைனி போன்ற வீரர்கள் விளையாடியதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக லெய்செஸ்டர்ஷிர் அணிக்கு முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 76 ரன்கள் குவித்தார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சுமாராக விளையாடிய ரிஷப் பண்ட் பயிற்சி ஆட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடியது இந்திய அணி ரசிகர்கள் அனைவரையும் சந்தோஷமடையச் செய்தது.

- Advertisement -

ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் ரசிகர்களுடன் இணைந்து எடுத்த செல்பி சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தை பதிவிட்ட ரசிகர் அந்த புகைப்படம் எடுத்த சமயத்தில் நடந்த நிகழ்வையும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

” நாங்கள் ரிஷப் பண்ட்டிடம் சென்று செல்பி எடுக்க அனுமதி கேட்டோம். அதற்கு ஒரு நிமிடம் இங்கே இருங்கள் நான் வந்து விடுகிறேன் என்று கூறி வீதியில் வீடு இல்லாமல் உட்கார்ந்து கொண்டிருந்த ஏழை ஒருவருக்கு உணவை கொடுத்து அவருக்கு மேலும் ஏதாவது உதவி வேண்டுமா என்று அக்கறையுடன் கேட்டார். அதன் பின்னர் எங்களுடன் வந்து செல்பி எடுத்துக் கொண்டார். உண்மையில் ரிஷப் பண்ட் நல்ல மனிதன் என்று ரசிகர் பாராட்டி கூறியிருந்தார்.

- Advertisement -

நாளை 5வது டெஸ்ட் போட்டி தொடங்கி ஐந்தாம் தேதி முடிவடைகிறது. அதன் பின்னர் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஜூலை 7ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.