திடீரென தனது பிறந்த நாளை மாற்றிய ரிஷப் பண்ட்… வெளியான மனதை நெகிழ வைக்கும் காரணம்

0
697

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக இருந்ததோடு டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் இருந்தவர் . கடந்த வருடம் டிசம்பர் 30ஆம் தேதி ஏற்பட்ட விபத்து காரணமாக தற்போது குணமடைந்து வருகிறார் .

டெல்லியில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தபோது இவர் சென்ற கார் விபத்திற்கு உள்ளானது . இந்த விபத்தில் இவரது மூட்டு மற்றும் முதுகு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது . இதனைத் தொடர்ந்து உத்ரகாண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் பிசிசிஐ அறிவுறுத்தலின்படி மும்பையில் உள்ள கோகிலா பெண் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் . இங்கு வைத்து ரிஷப் பண்டிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர் நடை பயிற்சி மற்றும் சிறு சிறு உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார் . ஆரம்பத்தில் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வந்த அவர் சில நாட்களுக்கு முன்பு எந்த ஒரு உபகரணத்தின் உதவியும் இல்லாமல் அவராகவே நடந்தார் . அதன் வீடியோவையும் தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருந்தார் . இவர் குணமாகி வரும் வேகத்தை பார்க்கும்போது 2023 உலக கோப்பைக்கு முன்பாகவே முழு உடர் தகுதியை பெற்றுவிடுவார் என்று பிசிசிஐ மருத்துவ குழு தெரிவித்து இருக்கிறது .

அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நேர்மறையான சிந்தனையோடு விபத்திலிருந்தும் அதன் காயங்களில் இருந்தும் குணமடைந்து வந்திருக்கிறார் ரிஷப் பண்ட் தற்போது இவர் பெங்களூருவில் இயங்கி வரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார் . ரஞ்சிகாந்த் என்ற பயிற்சியாளர் தான் ரிஷப் பண்டிற்கு பயிற்சிகளை வழங்கி வந்தார் . அவரது பெயர்ச்சியின் மூலம் தான் மாடிப்படிகளில் எந்தவித உபகரணத்தின் உதவியும் இன்றி வலியும் இன்றி ஏரி இறங்க பழகினார் ரிஷப் பண்ட் . மேலும் அவருக்கு நீச்சல் அக்வா தெரபி மற்றும் டேபிள் டென்னிஸ் போன்ற எளிய வகை உடற்பயிற்சிகளின் மூலம் அவரது உடல் தகுதியை மேம்படுத்தி வருவதும் இவர்தான் .

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று தனது பிறந்த நாளை மாற்றி பதிவிட்டு இருந்தார் ரிஷப் பண்ட் . அக்டோபர் மாதம் நான்காம் தேதி 1997 ஆம் வருடம் என்பதுதான் அவரது பிறந்த நாள் . ஆனால் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பிறந்த நாளை 5 ஜனவரி 2023 என்று பிரிண்ட் குறிப்பிட்டு இருக்கிறார் . இதனைக் கண்ட அவரது ரசிகர்கள் உறைந்து போய் உள்ளனர் இதற்கான காரணத்தைப் பற்றி ரிஷப் பண்ட் எந்தவித ஒரு அதிகார பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை

- Advertisement -

ஆனாலும் ரசிகர்கள் இது தொடர்பாக பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் . மிகவும் ஆபத்தான விபத்தில் சிக்கி மீண்டு வந்த பண்ட் இதனை தனது மறுபிறவியாக நினைத்து மீண்டும் பிறந்ததற்காக 05.01.2023 தனது புதிய பிறந்த நாளாக மாற்றி வைத்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர் . அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நாளைக் கூட அவர் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கலாம் எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

ரிஷப் பண்டின் நேர்மறையான இந்த சிந்தனை அவரது ரசிகர்களின் மனதை நெகிழச் செய்திருக்கிறது . தான் ஒரு விபத்திலிருந்து மீண்டு வந்ததை குறிப்பிடும் வகையில் தனது பிறந்த நாளை மாற்றி வைத்ததோடு அந்த விபத்தில் சிக்கியது ஏன் நினைத்து வருந்தி கொண்டு இருக்காமல் எதிர்காலத்தை எண்ணி அதற்காக மீண்டு எழுந்து மீண்டும் மைதானத்தில் களமிறங்குவதற்காக வேகமாக தயாராகி வரும் அவரை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்