“ஜெய்ஸ்வாலை பார்த்தா எனக்கே ஆச்சரியமா இருக்கு.. இப்படியே போனா அது நடக்க போகுது” – ரிஷப் பண்ட் பேச்சு

0
385
Jaiswal

இந்திய அணிக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக, பேட்டிங் யூனிட்டில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாதது பெரிய தலைவலியாக இருந்து வந்தது. கடைசியாக துவக்க இடத்தில் இருந்த ஷிகர் தவானையும் சுப்மன் கில்லை கொண்டு வந்து இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வெளியே அனுப்பி இருந்தது.

இதன் காரணமாக இந்திய பேட்டிங் யூனிட்டில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே இடது கை பேட்ஸ்மேன் ஆக இருந்தார். மேலும் மிடில் வரிசையில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இருந்து வந்தார். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சாலை விபத்தில் சிக்கியதால் அவரால் இந்திய அணிக்கு விளையாட முடியவில்லை.

- Advertisement -

மேலும் கடைசி டி20 உலகக் கோப்பையில் பினிஷர் ரோல் தினேஷ் கார்த்திக்கு கொடுக்கப்பட்டதால், ரிஷப் பண்ட் விளையாடும் அணியில் இடம் பெறவில்லை. மேலும் ரவீந்திர ஜடேஜா இல்லாத சூழ்நிலையில் அக்சர் படேல் மட்டுமே இடது கை பேட்ஸ்மேன் ஆக இருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் இந்திய பேட்டிங் யூனிட்டில் இடது கை பேட்ஸ்மேனாக ரவீந்திர ஜடேஜா மட்டுமே இருக்க முடிந்தது. இதன் காரணமாக இடது கை சுழற் பந்துவீச்சை எளிமையாக விளையாடுவதற்கும், மேலும் பவுலர்களை செட்டில் ஆகாமல் செய்யவும் இந்திய பேட்டிங் யூனிட்டால் முடியவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் டாப் ஆர்டரில் அதுவும் ஓபனிங் பேட்ஸ்மேனாக இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் கிடைத்திருப்பது இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரிய வசதியாக அமைந்திருக்கிறது. மேலும் அவர் சாதாரணமாக அணிக்குள் வரும் வீரர்கள் போல் இல்லாமல், குறைந்தது அடுத்த 10 வருடங்கள் ஆவது விளையாடக்கூடிய திறன் படைத்தவராக இருக்கிறார். அவருடைய ஆட்ட விழிப்புணர்வு மற்றும் கிரிக்கெட் அறிவு மிகச் சிறப்பாக இருக்கிறது.

- Advertisement -

ஜெய்ஸ்வால் திறமை பல முன்னாள் வீரர்களை கவர்ந்திருப்பது போலவே, இந்திய வீரர் ரிஷப் பண்டையும் கவர்ந்திருக்கிறது. இவர்கள் இருவருமே டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் அதிரடியாக விளையாடக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெய்ஸ்வால் பற்றி ரிஷப் பண்ட் கூறும்போது “ஜெய்ஸ்வாலை பார்த்தால் உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் வாய்ப்பு பெரும் எல்லா இளைஞர்களும் முன்னேறுவதை பார்க்க இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் புதிய வீரர்கள் அணிக்குள் வந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு செயல்பாட்டை எல்லா நேரமும் நம்மால் பார்க்க முடியாது.

இதையும் படிங்க : ஆண்டர்சனை ஹாட்ரிக் சிக்ஸர் இப்படித்தான் அடித்தேன்.. ரோகித் பாய் ஒரு விஷயம் சொன்னாரு – ஜெய்ஸ்வால் பேட்டி

ஆனால் இந்திய அணியில் இப்பொழுது எல்லா நேரமும் அது நடக்கிறது. அவர்கள் எது குறித்தும் அதிகம் யோசிக்காதது போல தலையை கீழே வைத்துக் கொண்டு விளையாடுகிறார்கள். இதேபோல் இதேபோல் ஜெய்ஸ்வால் எதையும் கண்டு கொள்ளாமல் தலையை குனிந்து கொண்டு, தான் செய்வதை மட்டுமே செய்து கொண்டிருப்பவராக இருக்கிறார். இது மட்டும் அப்படியே தொடர்ந்தால், அவர் நீண்ட காலம் இந்திய அணிக்கு விளையாட போகிறார்” என்று கூறியிருக்கிறார்.