ரிஷப் பண்ட் கிட்ட நாங்க இத சொன்னோம்.. அவர் ஏத்துக்காம வெளிய வந்துட்டார் – டெல்லி ஓனர் பேட்டி

0
329
Rishabh

ஐபிஎல் டெல்லி கேப்பிட்டல் அணியில் இருந்து அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் வெளியேறியதற்கான காரணம் குறித்து அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால் பேசி இருக்கிறார்.

ரிஷப் பண்ட் 2016 ஆம் ஆண்டு முதல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடி வந்து பிறகு கேப்டனாகவும் உயர்ந்தார். அவர் சாலை விபத்தில் சிக்கியிருந்து ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத பொழுது, அந்த ஆண்டு அவருக்கு டெல்லி கேப்பிட்டல் உரிமையாளர்கள் முழு சம்பளத்தையும் கொடுத்து ஆதரித்தார்கள். இருந்த போதும் இந்த முறை அந்த அணியில் இருந்து அவர் வெளியேறி விட்டார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுத்தார்

இதுகுறித்து டெல்லி அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால் கூறும் பொழுது ” இது நாங்கள் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவு கிடையாது. நாங்களும் அவரும் நன்றாக இணைந்து இருந்தோம். எல்லோரும் ஒன்று சேர்ந்து எடுத்த முடிவாகவே இது அமைந்திருந்தது. நாங்கள் ரிஷப் பண்ட்டிடம் சில விஷயங்களை எதிர்பார்த்து இருந்தோம். அது கடந்த சீசனிலோ அல்லது இந்த சீசனிலோ கிடைக்கவில்லை. அது குறித்து நாங்கள் எங்களுடைய கருத்தை அவருக்கு நேர்மையான முறையில் கூறினோம்”

“நாங்கள் அவருக்கு கருத்து தெரிவித்திருந்த சூழ்நிலையில், நாங்கள் எதிர்பார்த்தபடி எங்களுடைய கருத்தை எடுத்துக் கொள்ளவில்லை. அவர் உணர்வு வயப்பட்ட நிலையில் முடிவெடுத்தார். அவர் இங்கு தான் ஆரம்பித்தார் அவர் இங்குதான் வளர்ந்தார்”

- Advertisement -

என் இதயம் மீண்டும் விரும்பியது

“அவர் வேறு திசையில் செல்ல வேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்தார். நானும் அவரிடம் அவரை ஏலத்தில் எடுக்க மாட்டேன் என்று கூறியிருந்தேன். ஆனால் மீண்டும் நான் அவருக்காக ஏலத்தில் சென்றேன். என் இதயம் மீண்டும் அவர் டெல்லி அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்பியது. அவரை திரும்பப் பெற முயற்சி செய்தேன். அது சரியானதுதான்!”

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் 40 டெஸ்ட் சதம் உறுதி.. இவரை அடக்க கம்மின்ஸ் வழி கண்டுபிடிக்கணும் – மேக்ஸ்வெல் பேட்டி

“அவரை ஏலத்தில் எடுத்த பிறகு மேக்கப் செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் ஏலத்தில் அவருடைய விலை மீண்டும் அதிகமாகி விட்டது. அதனால் அவரை எடுக்கவில்லை. அவரை அணியிலிருந்து வெளியேற்றுவது என்பது நாங்கள் எடுத்த முடிவு கிடையாது. கடைசியில் எல்லோரும் கூட்டாக எடுத்த முடிவாக அது அமைந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -