இந்திய அணியின் இளம் இடது கை தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 40 சதங்களுக்கு மேல் எடுக்கக்கூடிய திறனை பெற்றிருப்பதாக தான் நினைப்பதாக ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் குவித்து பும்ராவுக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆஸ்திரேலிய மண்ணில் அவர் டெஸ்ட் சதம் எடுத்தது மற்றும் அதை எட்டுவதற்கு அவர் பின்பற்றிய பேட்டிங் டெக்னிக் ஆகியவை அவருக்கு பெரிய மதிப்பை உண்டாக்கி இருக்கின்றன.
இந்திய பேட்டிங் பாரம்பரியத்தில் முதல் முறை
இந்திய பேட்டிங் பாரம்பரியத்தில் தாங்கள் விளையாடிய காலகட்டத்தில் கவாஸ்கர், சச்சின் மற்றும் விராட் கோலி மூவரும் மற்ற எல்லோரையும் விட அதிக திறன் மற்றும் புகழ்பெற்றவர்களாக இருந்தார்கள். இவர்கள் மூவருமே வலதுகை பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் இந்த காலகட்டத்தில் இந்த பாரம்பரியத்தில் இன்னொரு வலது கை பேட்ஸ்மேனான கில் இந்த இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் முதல் முறையாக கவாஸ்கர், சச்சின், விராட் கோலி வரிசையில் ஒரு இடதுகை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால் இடம்பிடிப்பதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுகிறது. ஆஸ்திரேலியா பத்திரிகைகள் விராட் கோலிக்கு அடுத்து புதிய கிங் ஜெய்ஸ்வால் என ஏற்கனவே எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
40 டெஸ்ட் சதங்கள் அடிப்பார்
ஜெய்ஸ்வால் குறித்து மேக்ஸ்வெல் பேசும் பொழுது “ஜெயஸ்வால் 40க்கும் மேற்பட்ட டெஸ்ட் சதங்களை அடிக்கக்கூடியவராக தெரிகிறார். மேலும் அவர் சில வித்தியாசமான சாதனைகளை செய்வார். வெவ்வேறு கண்டிஷனுக்கு தகுந்தபடி விளையாடுவதற்கான சிறந்த திறனை அவர் பெற்றிருக்கிறார். அடுத்த சில ஆட்டங்களில் அவரை தடுப்பதற்கு ஆஸ்திரேலியா வழியை கண்டுபிடிக்காவிட்டால் அது பெரிய அச்சுறுத்தலாக அமையும்”
இதையும் படிங்க : ஐசிசி ரேங்கிங்.. ஜெய்ஸ்வால் NO.1 ஜோ ரூட்டுக்கு சவால்.. பும்ரா புதிய உச்சம்.. கோலி மீண்டும் உயர்வு
“ஹைலைட்ஸ் பேக்கேஜ் பார்க்கும் பொழுது அவர் நிறைய ஷாட்ஸ் விளையாடி இருக்கிறார். இதற்கு நடுவில் பார்க்கும் பொழுது அவர் பந்தை விட்ட விதம், பேக்-புட்டில் அவர் விளையாடிய பந்துகள், அவருடைய உறுதியான புட் வொர்க் எனச் சிறப்பாக இருந்தது. அதிகப்படியான அவருடைய பலவீனத்தை பார்க்க முடியவில்லை. மேலும் அவர் ஷார்ட் பந்துகளை சிறப்பாக விளையாடினார். அவருடைய டிரைவ் அருமையாக இருந்தது. மேலும் ஸ்பின்னிலும் அசாத்தியமாக செயல்பட்டார். அவர் அபாரமானவர்” என்று கூறி இருக்கிறார்.






