ரிஷப் பண்ட்க்கு என்சிஏ கொடுத்த சிக்னல்.. ஐபிஎல் டி20 உலககோப்பை.. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

0
216
IPL

இந்தியாவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி கொண்ட 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதற்கு அடுத்து இந்தியாவில் இரண்டு மாதம் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடக்க இருக்கிறது.

தற்போது நியூசிலாந்து-ஆஸ்திரேலியா, இலங்கை-பங்களாதேஷ் என நான்கு அணிகள் மட்டுமே சர்வதேச போட்டிகள் விளையாட்டு வருகிறது. இந்தத் தொடர்களும் விரைவில் முடிய, ஐபிஎல் தொடரில் விளையாடும் அனைத்து வீரர்களும் இந்தியாவிற்கு வந்து சேர இருக்கிறார்கள்.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் 10 அணிகளும் தங்களது பயிற்சி முகாம்களை அமைத்து பயிற்சியை ஆரம்பித்து விட்டன. சில அணிகள் தங்களது இந்திய உள்நாட்டு வீரர்களுக்கான பயிற்சிகளை ஏற்கனவே துவங்கிவிட்டது.

இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சாலை விபத்தில் சிக்கி ஒன்றரை வருடங்களுக்கு மேலாக எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் மறு வாழ்வில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்ன மாதிரியான பொறுப்பில் இருப்பார்? இல்லை இம்பேக்ட் பிளேயராக மட்டும் வருவாரா? என்பது போன்ற பல எதிர்பார்ப்பு மிக்க கேள்விகள் இருந்து வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் மிக முக்கியமாக இருந்தது அவர் உடல் தகுதியை பெற வேண்டும் என்பதுதான். மேலும் இந்திய வீரரான அவர் உடல் தகுதி பெற்றால், அதற்கான உடல் தகுதி சான்றிதழை என்சிஏ தேசிய கிரிக்கெட் அகாடமி கொடுக்க வேண்டும்.

தற்போது அவருக்கு என்சிஏ தேசிய கிரிக்கெட் அகாடமி உடல் தகுதி பெற்றதாக சான்றிதழ் கொடுத்திருக்கிறது. எனவே ரிஷப் பண்ட் நடைபெற இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனில் விளையாட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024.. கொல்கத்தா வீரர் விலகல்.. மாற்று வீரரால் அடித்த அதிர்ஷ்டம்.. சிஎஸ்கே-கு சோகம்

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் ஐபிஎல் தொடரில் முழு பங்களிப்பை கொடுத்து, நல்ல முறையில் செயல்பட்டார் என்றால், அடுத்து நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை இந்திய அணியிலும் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். தற்பொழுது இது ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருவருக்குமே மகிழ்ச்சியான செய்தியாக அமைந்திருக்கிறது.