ஐபிஎல் 2024.. கொல்கத்தா வீரர் விலகல்.. மாற்று வீரரால் அடித்த அதிர்ஷ்டம்.. சிஎஸ்கே-கு சோகம்

0
1287
KKR

17ஆவது ஐபிஎல் சீசன் நெருங்க நெருங்க நிறைய பரபரப்பான செய்திகள் ஐபிஎல் தொடரை ஒட்டி வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்படியான செய்திகள் ஐபிஎல் ரசிகர்களை மிகவும் எதிர்பார்ப்பில் தள்ளி வருகிறது. இதன் காரணமாக ரசிகர்கள் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்து ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதன் காரணமாக நிதிஷ் ராணா அந்த அணியை வழிநடத்தினார்.

- Advertisement -

கடைசியாக அந்த அணி 14 போட்டிகளில் 6 வெற்றிகள் பெற்று 12 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்தது. மிக மோசமாக செயல்பட்டது என்று கூற முடியாத அளவுக்கு அந்த அணியின் செயல்பாடு இருந்தது. மேற்கொண்டு இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தால் அந்த அணி பிளே ஆப் சுற்றில் இருந்து இருக்கும்.

இந்த நிலையில் இந்த ஆண்டு அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு திரும்புகிறார். குறிப்பாக கேப்டனும் இந்திய வீரருமான அவர் வருகின்ற காரணத்தினால், பேட்டிங் யூனிட் பெரிய அளவில் பலமடைகிறது. மேலும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறி இருக்கிறது. எனவே 3 சிறந்த சுழல் பந்து வீச்சாளர்களை வைத்திருக்கும் கொல்கத்தா அணி மீது பெரிய நம்பிக்கை உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜேசன்ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்தும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு எட்டு போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடி 150 க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் 285 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இவருக்குப் பதிலாக இங்கிலாந்து அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன், இங்கிலாந்து டி20 அணியின் துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட்டை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருக்கிறது. இவர் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடரில் இரண்டு சதங்கள் தொடர்ந்து அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணி இந்த ஆண்டு இவரை கழட்டிவிட்ட நிலையில் கொல்கத்தா அணி வாங்கியிருக்கிறது.

இதையும் படிங்க : “வெறித்தனமா இருக்காதிங்க.. ப்ளீஸ் டைம் அவுட் பிரச்சினையில் இருந்து வெளியே வாங்க” – இலங்கை அணிக்கு பங்களாதேஷ் கேப்டன் அறிவுரை

நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணமாக ஏறக்குறைய கிடைக்க மாட்டார் என்கின்ற நிலையே இருக்கிறது. இந்த நிலையில் அவருடைய இடத்திற்கு அவரைப் போலவே விக்கெட் கீப்பிங் செய்யக்கூடிய துவக்க வெளிநாட்டு ஆட்டக்காரராக பில் சால்ட் இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுப்பதற்கு முன்னால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை வாங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.