லக்னோவிற்கு சாவு பயம் கட்டிய ரிங்கு சிங்… 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது லக்னோ! – பிளே-ஆப் சுற்றுக்கும் தகுதி!

0
1652

கொல்கத்தா அணிக்காக இறுதிவரை நின்று போட்டியை நெருக்கமாக எடுத்துச்சென்ற ரிங்கு சிங் 1 ரன்னில் பினிஷ் செய்ய தவறிவிட்டார். இறுதியில் லக்னோ அணி வென்று பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

வாழ்வா? சாவா? போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, முதல் 10 ஓவர்களில் மிகவும் தடுமாற்றம் கண்டது. 73 ரன்கள் மட்டுமே அடித்து ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது.

- Advertisement -

அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஆயூஸ் பதோனி மற்றும் பூரான் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். பூரான் 30 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார். பதோனி 25 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் அடித்தது லக்னோ அணி.

இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு ஜேசன் ராய் 45 ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 24 ரன்கள் அடித்து அவுட்டாகினர். அதன்பிறகு உள்ளே வந்த நிதிஷ் ராணா(8), குர்பாஸ்(10) மற்றும் ரஸ்ஸல்(7) ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் கையில் இருந்த ஆட்டத்தை நழுவவிட்டு தடுமாற்றம் கண்டது கோல்கத்தா அணி. இருப்பினும் களத்தில் ரிங்கு சிங் இருந்ததால், இன்னும் கொல்கத்தா அணியினர் நம்பிக்கையை இழக்கவில்லை.

- Advertisement -

அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் கடைசி 3 ஓவர்களில் 51 ரன்கள் தேவைப்பட்டபோது, தனி ஆளாக நின்று கடைசி ஓவர் வரை எடுத்துச்சென்றார். துரதிஷ்டவசமாக 1 ரன்னில் கொல்கத்தா அணி போட்டியை இழந்தது. இறுதிவரை அவுட்டாகாமல் இருந்த ரிங்கு சிங் 61(32) ரன்கள் அடித்தார்.

மிகமுக்கியமான போட்டியில் வெற்றிபெற்ற லக்னோ அணி, 17 புள்ளிகள் பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 3ஆவது இடத்தை பிடித்து எலிமினேட்டர் போட்டியில் விளையாட உள்ளது.