நேற்று பேட் மட்டும் பரிசா கிடைக்கல.. முக்கியமா அது கிடைச்சது.. நன்றி விராட் பையா – ரிங்கு சிங் மெசேஜ்

0
503
Rinku

தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வது ஐபிஎல் சீசன் மே மாதம் 26ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த முறை நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.

சற்று நேரத்திற்கு முன்பாக டி20 உலகக் கோப்பை அணி ஏப்ரல் மாதம் கடைசி வாரம் வெளியிடப்படலாம் என்கின்ற செய்தி வெளிவந்திருக்கிறது. மேலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இருந்து வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்ற செய்தியும் இருக்கிறது. ஏற்கனவே அணி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாகவும், அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யாராவது மோசமாக விளையாடினால் மட்டுமே நீக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற பொழுது, இந்திய அணியுடன் இல்லாத ரிங்கு சிங் தரம்சாலா சென்று இந்திய அணியுடன் இணைந்து இருந்தார். அப்பொழுது டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கும் வீரர்களுக்கான போட்டோ ஷூட்டிங் நடைபெற்றது. அதில் பங்கு பெறவே அவர் அங்கு சென்று இருந்தார். எனவே டி20 உலகக்கோப்பையில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது.

ரிங்கு சிங் தற்பொழுது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார். முதல் போட்டியில் முக்கியமான நேரத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக ரசலுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். ரசல் அதிரடியாக விளையாடுவதற்கு சிறந்த ஒத்துழைப்பை கொடுத்து சென்றார். நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் அவர் களம் இறங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. மூன்று விக்கெட் இழப்பில் கொல்கத்தா அணி ஆர்சிபி அணியை வீழ்த்தியது.

மேலும் நேற்றைய ஆட்ட முடிவுக்கு பின்னால் விராட் கோலி ரிங்கு சிங்கை அழைத்துச் சென்று அவருக்கு பரிசாக தன்னுடைய பேட் ஒன்றை கொடுத்தார். பின்பு அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டும் இருந்தார்கள். இந்த புகைப்படமும் செய்தியும் நேற்று முதலே சமூக வலைதளத்தில் பரவலாக வெளிவந்தன.

- Advertisement -

இதையும் படிங்க : ஆர்சிபி 28 கோடிக்கு வாங்குன அந்த 2பேர் வேண்டாம்.. அதுக்கு பதிலா இவங்கள கொண்டு வாங்க – டாம் மூடி பேச்சு

இந்த நிலையில் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் செய்தி வெளியிட்டுள்ள ரிங்கு சிங் அதில் “நேற்று பேட் மட்டும் இல்லாமல் நல்ல அறிவுரையும் அவரிடம் இருந்து கிடைத்தது. நன்றி விராட் பையா” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஐபிஎல் தொடர் மட்டும் இல்லாமல் வருகின்ற டி20 உலகக்கோப்பைக்கும் சேர்த்து பொதுவான தன்னுடைய அனுபவத்தை ரிங்கு சிங் உடன் விராட் கோலி பகிர்ந்து இருக்கிறார் என்று தெரிகிறது. மேலும் தன்னை இந்திய டி20 அணியில் வைத்திருப்பது, கிரிக்கெட்டை உலகம் எங்கும் பிரபலப்படுத்தத்தான் என்றும், தன்னால் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக இன்னும் செயல்பட முடியும் என்றும் விராட் கோலி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.