ரிங்கு சிங்? ரஜத் பட்டிதார்?.. டிராவிட் சொல்லிவிட்டு சென்றது என்ன?.. கேஎல்.ராகுல் தனி வழியா?

0
459
Rinku

தற்பொழுது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் அந்த நாட்டு அணியை எதிர்த்து கேஎல்.ராகுல் தலைமையில் விளையாடுகிறது.

நேற்று முன்தினம் ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்றது.

- Advertisement -

மிகக்குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச்சில் 116 ரன்களுக்கு சுருட்டி, பேட்டிங்கில் எந்தவித சிரமத்தையும் காட்டாமல் அறிமுக வீரர் சாய் சுதர்சன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உடைய அரைசதங்களால் எளிதான வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் அடுத்து நடக்க இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டெஸ்ட் அணியுடன் சென்று இணைந்து விட்டார். இதற்கு முன்பாகவே தலைமை வீச்சாளர் ராகுல் டிராவிட் இந்திய டெஸ்ட் அணியுடன் சென்று சேர்ந்து விட்டார்.

இன்று இந்த தொடரின் இரண்டாவது போட்டி க்யுபர்கா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் உடைய இடம் யாருக்கு கொடுக்கப்படும் என்பது ஒரு சுவாரசியமான கேள்வியாக இருந்து வருகிறது.

- Advertisement -

தற்போதைய இந்திய அணி உருவாக்கத்தில் ராகுல் டிராவிட் முக்கிய பங்கை கொண்டு இருக்கிறார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தற்போது இல்லை. எனவே ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தை, இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமாக காத்திருக்கும் ரிங்கு சிங் இல்லை ரஜத் பட்டிதார் இருவரில் ஒருவருக்கு கொடுக்க வேண்டும். எனவே ராகுல் டிராவிட் இருவரில் யார் என்று முடிவு செய்து கொடுத்து விட்டு சென்றிருக்கிறார் என்று தெரியவில்லை.

இல்லை இந்த விஷயத்தை முழுக்க முழுக்க கேப்டனான கேஎல்.ராகுல் முடிவு செய்கிறாரா என்பது குறித்தும் தெரியவில்லை. ஆனால் இன்றைய போட்டியில் இந்த இருவரில் ஒருவர் இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமாவது உறுதி. ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் விளையாட வேண்டிய அவசியம் இருப்பதால், ரஜத் பட்டிதார் சரியான தேர்வாக இருக்கலாம். ஆனால் ரிங்கு சிங் கட்டாயம் விளையாடுவார் என்று ஏற்கனவே கே.எல்.ராகுல் கூறியிருந்தார். எனவே பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!