“ரோகித் டிராவிட்கிட்ட என்னை நீங்க கூப்பிட வாய்ப்பே இல்லைனு சொன்னேன்.. ஆனா கடைசியா..!” – ஆஸி மேட்ச் பற்றி அஷ்வின் பகிர்ந்த சுவாரசியமான விஷயம்!

0
1601
Ashwin

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான முறையில் முதல் வெற்றியைப் பெற்று பெருத்த நம்பிக்கையில் இருக்கிறது!

இந்தப் போட்டியில் இந்திய சிந்தனைக் குழு மூன்று ஸ்பின்னர்களுடன் செல்வது என்கின்ற மும்முனை தாக்குதல் வியூகத்தை வகுத்தது. இது சென்னை ஆடுகளத்தில் இந்திய அணிக்கு நல்ல பலனையே கொடுத்தது.

- Advertisement -

குறிப்பிட்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் மூன்று பேரும் சேர்ந்து ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான ஆறு பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்திய அணியை முதல் பாதியிலேயே போட்டிக்கொள் கொண்டு வந்து விட்டனர்.

இதில் இந்திய ஒருநாள் கிரிக்கெட்டுக்கு நீண்ட நாட்கள் கழித்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச்சிறப்பாக வந்து வீசி 10 ஓவர்களில் 38 ரன்கள் தந்து, கேமரூன் கிரீன் விக்கெட்டையும் கைப்பற்றி, சிறப்பான செயல்பாட்டை தந்து நம்பிக்கை அளித்து இருக்கிறார்.

இந்தப் போட்டிக்கு பின்னால் பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “இது திடீர் அழைப்பை போன்றது. நான் வீட்டில் மிகவும் இயல்பாக இருந்தேன். இரண்டு கிளப் கேம்களை விளையாடினேன். ஆனால் ரோகித் மற்றும் டிராவிட் என்னிடம் ஒரு சூழ்நிலை இருந்தால் நாங்கள் உங்களிடம் வருவோம் என்று கூறினார்கள். நான் அவர்களிடம் நிச்சயம் நீங்கள் என்னிடம் வர மாட்டீர்கள் என்று சொன்னேன்.

- Advertisement -

நான் சென்னை ஆடுகளத்தில் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். ஆனால் இது அதுபோல இல்லாமல் விரிசல்கள் உடன் காணப்பட்டது. இதில் பந்து எப்படி வெளிப்படும்? என்பது குறித்து நாங்கள் கவலைப்பட்டோம். இரண்டாவது பகுதியில் ஆஸ்திரேலிய வேத பந்துவீச்சாளர்கள் எப்படி பந்து வீசினார்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்கள்.

மக்கள் கூட்டம் எப்பொழுதுமே எங்களுக்கு பின்னால் வருகிறது. நல்ல வேலையாக நாங்கள் டாசில் தோற்று விட்டோம். அதற்குப் பிறகு பந்துவீச்சில் ஜடேஜா மிக முக்கியமான நபராக மாறிவிட்டார்.

இங்கு வேகத்தை விட நாம் ஆடுகளத்திற்கு என்ன வேகத்தில் பந்து வீசுகிறோம் என்பதற்கு தகவமைவதுதான் முக்கியம். சைடு ஸ்பின், ஓவர் ஸ்பின் இவற்றை வீசுவதற்கு என் உடலை நான் சரியாக வைக்க எனக்கு ஏழு முதல் எட்டு பந்துகள் தேவைப்படும்!” என்று கூறியிருக்கிறார்!