விராட் கோலி கூட சேர்ந்து மேக்ஸ்வெல்லுக்கும் அழுத்தம் அதிகமாயிடுச்சு – ரிக்கி பாண்டிங் ஆதரவு

0
20
Maxwell

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனில் ஆர்சிபிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அவருக்கு ஆதரவாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனும் தற்போதைய டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் பேசியிருக்கிறார்.

கிளன் மேக்ஸ்வெல் தன்னுடைய பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ந்து விளையாடுவது இன்னும் சிக்கலை கொண்டு வரும் என்று, ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தன்னை அணியில் சேர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதன்படி அவர் அந்த போட்டியில் விளையாட வைக்கப்படவில்லை.

- Advertisement -

இதற்கு முன்பு இதே இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனி ஆளாக இரட்டை சதம் அடித்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியை சிக்கலான நிலையில் இருந்து வெல்ல வைத்தார். அப்படிப்பட்ட வீரர் தற்போது இந்தியாவில் ஐபிஎல் தொடரில் தடுமாறி வருவது பெரிய வியப்பளிப்பதாக இருக்கிறது.

இந்த நிலையில் கிளன் மேக்ஸ்வெல்லுக்கு ஆதரவாக பேசி இருக்கும் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “ஆர்சிபி அணியை பொருத்தவரை எடுத்துக் கொண்டால் அந்த அணியின் பெரிய வீரர்களில் விராட் கோலி உடன் சேர்த்து கிளன் மேக்ஸ்வெல்லும் ஒருவர். இதன் காரணமாக இயல்பாகவே அவர் மீது அழுத்தம் உண்டாகிறது. இவர்கள் சரியாக விளையாடாத பொழுது அது அணியின் முடிவுகளை பாதிக்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் அந்த அணியை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு தனிப்பட்ட வீரர்களின் மீதும் அழுத்தம் இருக்கிறது. தற்போது மேக்ஸ்வெல் ஒதுங்கி இருப்பதாக ஒரு கட்டுரையை படித்தேன். சில ஆட்டங்கள் விளையாடாமல் இருந்துவிட்டு அவர் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீரருக்கும் மீண்டு வருவதற்கு தனிப்பட்ட வழிமுறைகள் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : நீங்க இத செஞ்சது தப்பு இல்லையா?.. ஹர்பஜன்சிங் நேரடி கேள்வி.. ரியான் பராக் தந்த பதில்

நீங்கள் தொடர்ச்சியாக அதிகமாக கிரிக்கெட் விளையாடும் பொழுது உங்களுக்கு விருப்பமான குடும்பத்தை விட்டு விலகி இருக்கிறீர்கள். இதுவே தனிப்பட்ட பெரிய அழுத்தத்தை உருவாக்கும். எனவே இதைப் புரிந்து கொண்டு இந்த மாதிரியான நேரத்தில் சம்பந்தப்பட்ட வீரருக்கு அணி நிர்வாகம் ஆதரவாக இருக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டிருக்கிறார்