நீங்க இத செஞ்சது தப்பு இல்லையா?.. ஹர்பஜன்சிங் நேரடி கேள்வி.. ரியான் பராக் தந்த பதில்

0
114
Harbhajan

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஏழு போட்டிகளாக ஏமாற்றம் அளித்து வருகிறார். அதே சமயத்தில் அந்த அணியின் இளம் வீரர் ரியான் பராக் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஹர்பஜன்சிங் ரியான் பராக்கை நேரில் பாராட்டி விமர்சனம் செய்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 224 ரன்களை துரத்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 14 பந்துகளில் அதிரடியாக ரியான் பராக் 34 ரன்கள் எடுத்தார். ஆனால் ஹர்ஷித் ராணாவின் அதே ஓவரில் ஒரு தவறான ஷாட் விளையாடி ஆட்டம் இழந்தார். இல்லையென்றால் நேற்று இன்னும் எளிதாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்று இருக்கும்.

- Advertisement -

இந்த போட்டி முடிவுக்கு பின்னால் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் அம்பதி ராயுடு இருவரும் ரியான் பராக்கை பேட்டி எடுத்தார்கள். மேலும் ரியான் பராக்கை பாராட்டியதோடு, ஹர்பஜன் சிங் முக்கியமான ஒரு விமர்சனத்தையும் முன்வைத்தார். அதற்கு ரியான் பராக் நேரடியாகவும் பதில் தந்தார்.

ரியான் பராக்கிடம் பேசிய ஹர்பஜன் சிங் “வாழ்த்துக்கள் ரியான் பராக் நீங்கள் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். நீங்கள் நன்றாக விளையாடுகிறீர்கள், ஆனால் அதே சமயத்தில் சில நேரங்களில் தவறான ஷாட் விளையாடி ஆட்டம் இழந்து விடுகிறீர்கள். இது உங்களுக்கு தவறாக தெரியவில்லையா?” என்று கேள்வியை முன் வைத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய ரியான் பராக் “நானும் நீங்கள் கூறியதை யோசித்துக் கொண்டிருந்தேன். அடுத்த முறை இதே போல் தவறு நடக்காமல் நான் பார்த்துக் கொள்ள முயற்சி செய்கிறேன்” என்று பதில் அளித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : எனக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்காம இருக்குறதுக்கும்.. பீல்டிங் வெளியில இருக்கிறதுக்கும் இதான் காரணம் – ரிங்கு சிங் பேட்டி

இதற்கு அடுத்து அம்பதி ராயுடு பேசும் பொழுது “நீங்கள் நன்றாக விளையாடுகிறீர்கள். நீங்கள் இந்தியாவுக்காக அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என்று நான் விருப்பப்படுகிறேன். இதை உங்களால் செய்ய முடியும் என்று நம்புகிறேன்” என்று கூறினார். இதற்கு ரியான் பராக் அவருக்கு நன்றி தெரிவித்தார்.