ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மகேந்திர சிங் தோனியை விட டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் சிறந்தவராக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் விபத்தில் சிக்கிய பிறகு தனக்கு அளித்த வாக்குறுதி பற்றியும் பேசி இருக்கிறார்.
ரிஷப் பண்ட் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2022 ஆம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வருவது தாமதமாகும் என்றும், வந்தாலும் விக்கெட் கீப்பிங் பழைய முறையில் செயல்பட முடியாது எனவும் பல யூகங்கள் சென்றது. ஆனால் அதை அத்தனையும் ரிஷப் பண்ட் தற்பொழுது தவிடு பொடி ஆக்கி இருக்கிறார்.
ரிஷப் பண்ட் மறு எழுச்சி
ரிஷப் பண்ட் சாலை விபத்தில் சிக்கி பிறகு மறுவாழ்வில் இருந்து மீண்டு வந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரராக வந்தார். இதில் அவர் பேட்டிங்கை விட மிக கடினம் என்று கருதப்பட்ட பிஸ்கட் கீப்பிங்கை அருமையாக செய்தார்.
இதுதான் அவரை டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்குள் கொண்டு வந்தது. அடுத்து இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணிகளும் இடம் பெற்றார். தற்பொழுது பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார். இந்த வகையில் ரிஷப் பண்ட் விட்ட இடங்களை மீண்டும் பிடித்து விட்டார் என்று கூறலாம்.
தோனியை விட சிறந்தவர்
தற்போது ரிஷப் பண்ட் குறித்து பேசி இருக்கும் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது ” ரிசப் பண்ட் திரும்பி வந்திருப்பது குறிப்பிடத்தக்க ஒரு மறுபிரவேசம். அவருடைய சாலை விபத்து கதைகளை கேட்டால் அதில் மன வடுக்கள் மட்டுமே மீதியாக இருக்கும். அவர் மறு வாழ்வில் இருந்து வந்த பொழுது அனுபவித்த நிலைமைகளை வைத்து பார்க்கும் பொழுது இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாட மாட்டார் என்று நினைத்தேன்.
கடந்த ஆண்டில் 12 மாதங்களுக்கு முன்பாக அவர் எனக்கு ஒரு வாக்குறுதி தந்தார். நிச்சயமாக அணிக்கு திரும்பி வந்து விளையாடுவேன் என கூறி இருந்தார். அவர் வெறும் பேட்டிங் மட்டும் செய்யலாம் என்றும், இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்தலாம் என்றும் நினைத்தோம். ஆனால் அவர் எங்கள் அணிக்காக விக்கெட் கீப்பிங் வரை செய்து மேலும் அதிக ரன் குவித்தவராகவும் அணிக்கு வந்தார். டி20உலகக் கோப்பை இந்திய அணிகள் இடம் பெற்று உலகக் கோப்பை வென்ற அணியிலும் அங்கம் ஆகிவிட்டார்.
இதையும் படிங்க : ஸ்பெஷலா அதுல ரெடியாகிகிட்டு இருக்கேன்.. கம்பீர் எதிர்பார்ப்ப கம்ப்ளீட் பண்ணிடுவேன் – திலக் வர்மா பேட்டி
தற்பொழுது டெஸ்ட் அணியிலும் இடம் பெற்றிருக்கிறார். ஸ்டெம்புக்குப் பின்னால் இருந்து அணியை மிகவும் உற்சாகமாக வைத்திருக்கக் கூடியவர். அவர் ஏதோ சில ரன்கள் எடுக்க விளையாட வர கூடியவர் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட் எடுத்துக் கொண்டால் அவர் குறைந்தது ஒரு ஐந்து சதங்களை மிஸ் பண்ணி விட்டார். தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதங்கள் அடித்திருக்கிறார். ஆனால் ரிஷப் பண்ட் அதை இப்பொழுதே எட்டிவிட்டார். அவர் மிகச் சிறந்த வீரர்” என்று கூறி இருக்கிறார்.