ஸ்மித் லபுசேன்.. நீங்க ரெண்டு பேரும் விராட் செஞ்ச இதை செய்யுங்க.. செமையா திரும்பி வரலாம் – ரிக்கி பாண்டிங் அறிவுரை

0
249
Virat

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ஸ்மித் மற்றும் லபுசேன் இருவரும் விராட் கோலியை பின்பற்றி மீண்டும் பேட்டிங் ஃபார்முக்கு வர வேண்டும் என ரிக்கி பாண்டிங் அறிவுரை கூறியிருக்கிறார்.

இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களான இவர்களது இருவரின் பேட்டிங்கும் மிகவும் மோசமாக இருந்தது. இந்திய அணியை 150 ரன்களில் முதலில் சுருட்டிய போதும், ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைவதற்கு இவர்களுடைய பேட்டிங் சரியில்லாதது முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

மிகப்பெரிய அழுத்தத்தை வென்ற விராட் கோலி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக இருந்து ஆஸ்திரேலியா மீடியாக்கள் பெரிய அளவில் விராட் கோலிக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடி வந்தன. இது அவருக்கு கொடுக்கப்படும் மரியாதையாக இருந்தாலும் கூட பார்மில் இல்லாத விராட் கோலிக்கு தனிப்பட்ட அழுத்தமாகமாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தது.

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் 12 பந்தில் 5 ரன்கள் மட்டும் எடுத்து விராட் கோலி ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 143 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் சதம் அடித்தார். மிகவும் ரிலாக்ஸாக காணப்பட்ட விராட் கோலி இயல்பாக விளையாடி சதத்தை எட்டினார். தன்னைச் சுற்றி உருவாக்கப்பட்டிருந்த அழுத்தத்தை துடைத்து விட்டார்.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் கூறிய அறிவுரை

இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் மற்ற எல்லா பேட்ஸ்மேன்களையும் விட மார்னஸ் லபுசேன் மிகவும் தடுமாற்றமாக தெரிந்தார். உயர்தர பந்துவீச்சுக்கு எதிராக பேட்டிங் செய்ய கடினமான விக்கெட் மீண்டு வருவதற்கு அவர் ஏதாவது ஒரு வழிமுறையை கண்டுபிடித்தாக வேண்டும்”

இதையும் படிங்க : 110 கோடி பணம்.. ஆனா பஞ்சாப் இதை கூட செய்ய முடியல.. பெருசா மாட்டிட்டாங்க – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

“அதே சமயத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி எதிர்ப்பை எதிர்த்து விளையாடுவதை விட்டுவிட்டு தன்னுடைய பலத்தில் கவனம் செலுத்தி விளையாடினார். இதைத்தான் ஸ்மித் மற்றும் லபுசேன் இருவரும் பின்பற்ற வேண்டும். அவர்கள் தங்களுக்கு என ஒரு சொந்த வழியை கண்டுபிடித்து, சரியான நோக்கத்தை வெளிப்படுத்தி விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -