நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 110 கோடி பணம் இருந்தும் பஞ்சாப் கிங்ஸ் ஒரு குறிப்பிட்ட பெரிய தவறை செய்திருப்பதாக இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.
தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி நல்ல முறையில் ஓரளவுக்கு அணியை தேர்வு செய்திருப்பதாக விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், ஆகாஷ் சோப்ரா வித்தியாசமான கருத்தை தெரிவித்திருக்கிறார். மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் வழக்கமான தவறையே செய்திருப்பதாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.
ஓபனர்களில் இருந்து ஆரம்பிக்கலாம்
இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “நாம் முதலில் ஓபனர்களில் இருந்து ஆரம்பிக்கலாம். இந்த இடத்திற்குப் பிரப்சிம்ரன் சிங்கை தக்க வைத்துக்கொண்டு பிரியன்ஸ் ஆர்யாவை அவர்கள் வாங்கினார்கள். அவர் டெல்லி பிரிமியர் லீக்கில் மிகச் சிறப்பாக விளையாடி சிக்ஸர்கள் அடித்தார். இருந்தாலும் கூட அவருக்கு பெரிதான ஐபிஎல் அனுபவம் கிடையாது”
“அவர்கள் கையில் 110 கோடி பணம் இருந்தும் அவர்கள் தங்கள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இரண்டு அன்காப்டு இந்திய வீரர்களை வைத்திருப்பார்கள் என்றால், அவர்கள் ஏலத்தில் நன்றாக சென்றார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியுமா? இது ஒரு பகடைக்காய் நிலைமை. இவ்வளவு பணம் இருந்த பொழுது இசான் கிஷான், ஜோஸ் பட்லர் அல்லது பில் சால்ட் யாரையாவது ஒருவரை வாங்கி இருக்க வேண்டும்”
இது நடக்குமா யாருக்கு தெரியும்
“இந்த நிலையில் மார்க்கஸ் ஸ்டோனிசை துவக்க ஆட்டக்காரராக பயன்படுத்துவது அவர்களுக்கு இரண்டாவது விருப்பமாக இருக்கலாம். அவர் துவக்க ஆட்டக்காரராக ஏற்கனவே விளையாடி இருக்கிறார். எனவே ரிக்கி பாண்டிங் இதற்காக அவரை அழைத்து வந்திருக்கலாம். எனவே அவரை வைத்து ஓபன் செய்யலாம் ஆனால் இது யாருக்கு தெரியும்?”
இதையும் படிங்க : ஜிம்பாப்வே டி20.. பாகிஸ்தான் அணியில் திடீர் 3 மாற்றம்.. புது கேப்டன்.. ஆஸி கொடுத்த பாடம்
“ஜோஸ் இங்லீஷ் இருக்கிறார். அவரையும் தொடக்க இடத்திற்கு கொண்டு வரலாம். அவர் மிகவும் டிசிப்ளினான வீர அவரால் ஓபன் செய்ய முடியும். ஆனால் இவரை வைத்து ஓபன் செய்யும் பொழுது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பேலன்ஸ் தடுமாறும்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.