இந்தியாவுக்கு சாதகமாக மாறிய ஆட்டம்.. நாங்க அப்படி செய்ததே இல்ல.. ரிக்கி பாண்டிங் பேச்சு

0
11258

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் அடித்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்கள் எடுத்து களத்தில் ஆட்டம் இழக்காமல் இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் முதல் நாள் ஆடுகளம் இப்படித்தான் செயல்படும் என நான் எதிர்பார்த்தேன். ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்றால் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தை இந்திய அணி தயாரித்தால் தான் அது நடக்கும்.

ஏனென்றால் சுழற் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகவும் கடினம். மேலும் ஆஸ்திரலிய சுழற் பந்துவீச்சாளர்களை விட இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா அணியில் இரண்டு வலது கை ஆப் இன் வீசும் பந்துவீச்சாளர்கள் விளையாடுகிறார்கள்.

அதில் ஒருவர் தனது முதல் போட்டியில் எந்த அனுபவம் இன்றி விளையாடுகிறார். நாங்கள் ஆஸ்திரேலியா அணிக்கு ஆக விளையாடிக் கொண்டிருக்கும்போது ஆடுகளப் பராமரிப்பாளர்களிடம் இந்த மாதிரி ஆடுகளத்தை தயாரியுங்கள் என்று எங்களால் சொல்ல முடியாது. ஆடுகள பராமரிப்பாளர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை தான் அவர்கள் செய்வார்கள்.

- Advertisement -

அவ்வளவு ஏன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூட ஆடுகள பராமரிப்பாளர்களிடம் எந்த அறிவுரையும் கூற முடியாது. ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பேட்டிங்கில் பெரிய ரன்கள் அடிக்காத வரை இந்த டெஸ்ட் போட்டியில் அவர்களால் வெல்வது கடினம் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். அதேபோன்று மார்க் பேசும் போது ரோஹித் சர்மாவின் ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியை அதிகப்படுத்தி விட்டதாக கூறியுள்ளார்.