கடைசி ஓவர் கடைசி பாலில் சூரியகுமார் அடித்த சிக்ஸர்; தன்னோட சிக்ஸரை பார்த்து ரசித்துக்கொண்டிருந்த சூரியாகுமார் யாதவ்! – வீடியோ உள்ளே..

0
1339

நெதர்லாந்துக்கு எதிராக கடைசி ஓவரின் கடைசி பந்தில், தான் அடித்த சிக்சரை பார்த்து ரசித்து கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ். இதனை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

டி20 உலக கோப்பையில் இந்தியா தனது இரண்டாவது சூப்பர் 12 போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement -

இப்போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் அரைசதம் அடித்திருந்தனர். பவர்-பிளே ஓவரில் இந்திய அணி 33 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. அதற்கு அடுத்த 14 ஓவர்களில் கிட்டத்தட்ட 150 ரன்கள் வரை எடுக்க முடிந்ததற்கு முழு முக்கிய காரணம் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் விளையாடிய அதிரடியான ஆட்டம் தான்.

விராட் கோலி 44 பந்துகளில் 62 ரன்கள் அடித்திருந்தார். சூர்யா வெறும் 25 பந்துகளில் 51 ரன்கள் அடித்திருந்தார். ஏழு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் இதில் அடங்கும்.

வழக்கமாக அதிக சிக்ஸர்களை அடிக்கக்கூடிய சூரியகுமார் யாதவ் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் தான் சிக்ஸர் அடித்தார். அதன் மூலம் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார்.

- Advertisement -

சூரியகுமாரின் அதிரடியான ஆட்டத்தை ஐசிசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு இருந்தது. அதை தனது ஹோட்டல் அறையில் படுத்தபடி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் சூரியகுமார்.

சூர்யா தனது ஆட்டத்தை ரசிப்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளார் அவரது மனைவி. விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யா வெளியிட்டிருக்கிறார்.