“திரும்ப இத செஞ்சா.. பாபர் அசாமை டீம விட்டு தூக்கிடுங்க!” – ரமீஷ் ராஜா அதிரடி அறிவிப்பு!

0
3303
Babar

நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவான தொடராக அமைந்தது.

மொத்தம் லீக் சுற்றில் ஒன்பது போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் தலைமையில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, அரை இறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

- Advertisement -

கடந்த மூன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து அரையிறுதிக்கு தகுதிப்பெற முடியாமல் வெளியேறிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானுக்கு உகந்த இந்திய சூழ்நிலையில் உலகக் கோப்பை நடந்தும் வெளியேறியது பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

நடந்து முடிந்த இந்த உலகக் கோப்பை தொடரில் கேப்டன் பாபர் அசாம் மொத்தம் ஒன்பது போட்டிகளில் நான்கு அரை சதங்கள் உடன் 40 ஆவரேஜில் 320 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அவரது பேட்டிங் எடுபடாததும் பாகிஸ்தான் அணி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நாடு திரும்பியதும் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் டெஸ்ட் வடிவத்திற்கு ஷான் மசூத், வெள்ளைப் பந்து வடிவத்திற்கு ஷாகின் அப்ரிடி புதிய கேப்டன்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

பாபர் அசாம் பேட்டிங்கில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள நேரத்தையும் பந்துகளையும் எடுத்துக் கொள்கிறார். ஆனால் அவர் தனக்கு கிடைக்கும் தொடக்கத்தை பெரிதாக பயன்படுத்த முடியாமல் போகும் பொழுது, அது அணியின் வெற்றியை பெரிதாக பாதிக்கிறது. அவர் நேரத்தையும் பந்துகளையும் எடுத்து அடிக்கும் அரைசதத்தால், போட்டியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடிவதில்லை.

இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ரமீஷ் ராஜா கூறும் பொழுது “அவர் அடுத்து அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தால், உங்களுக்கு அடுத்து அணியில் இடம் இருக்காது என்கின்ற எச்சரிக்கையை கொடுங்கள்.

அவர் போட்டியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு அதிக பந்துகளையும் நேரத்தையும் எடுத்துக் கொள்கிறார். இதற்குப் பிறகு அவர் ஒரு ஆரம்பத்தைப் பெற்று ஆனால் அதை பெரிய ஸ்கோராக மாற்றாமல் ஆட்டம் இழக்கும் பொழுது அது அணிக்கு பெரிய பாதிப்பை உருவாக்குகிறது. எனவே அடுத்த முறை இப்படி நடந்தால் அணியில் இடம் இல்லை என்று கூறுங்கள்!” என்று தெரிவித்திருக்கிறார்!