ஓய்வு பெற்ற வார்னர்.. சச்சின் அனுப்பிய அற்புதமான வாழ்த்து.. நெகிழ்ச்சியான தருணம்!

0
418
Sachin

ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் துவக்க ஆட்டக்காரராக அதிக ரன்கள் குவித்திருந்த டேவிட் வார்னர், இன்று நடைபெற்ற முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி உடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.

டேவிட் வார்னர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து துவக்க ஆட்டக்காரராக 18,000 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார். மேலும் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மொத்தம் 49 சர்வதேச சதங்கள் அடித்திருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் முதல் தரப் போட்டிகளில் விளையாடாமலே, ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகிய ஒரே வீரர் என்கின்ற அரிய சிறப்பே டேவிட் வார்னர் எத்தகைய திறமையானவர் என்பதை காட்டிவிடும்.

2009 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா அணிக்கு அறிமுகமானார். அதே ஆண்டு அதே மாதத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.

ஆனால் இதற்குப் பிறகு ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் கழித்துதான் டேவிட் வார்னருக்கு ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம் கிடைத்தது. இங்கும் தனது இடத்தை மிகவும் கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

- Advertisement -

டேவிட் வார்னர் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 112 போட்டிகளில் 205 இன்னிங்ஸ்களில் 8,786 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 26 சதங்கள் மற்றும் 37 அரை சதங்கள் அடக்கம். இவரது டெஸ்ட் சராசரி 45 ரன்கள் ஆக இருக்கிறது.

டேவிட் வார்னரின் ஓய்வுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ள சச்சின் அதில் கூறும் பொழுது “ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக டி20 கிரிக்கெட்டராக இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவது என்பது, அவரின் தகவமைப்பு மற்றும் கிரிக்கெட் ஆர்வத்தை காட்டுகிறது. கிரிக்கெட்டில் அவரது ஆர்வம் மற்றும் அவர் மாறிக்கொண்ட விதம் மிகச் சிறப்பான ஒன்று.

அவரது ஆக்ரோஷமான பேட்டிங் அணுகுமுறை, ஒரு இன்னிங்ஸை வேகப்படுத்தும் கலையில் அவர் தேர்ச்சி அடைந்த விதத்தை எடுத்துக்காட்டுகிறது. அற்புதமான டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் டேவிட் வார்னர். மேலும் உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்!” என்று கூறியிருக்கிறார்!