சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி தேர்வில் தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கருக்கும் இடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த வாரத்தில் சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி அறிவிக்கப்பட்டது. மேலும் அதில் இறுதி செய்யப்பட்ட அணியில் ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டார். மேலும் பும்ரா உடல் தகுதி பெறாததால் வெளியேறினார். இவர்களுடைய இடத்திற்கு வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ராணா இருவரும் இடம் பெற்றார்கள்.
கம்பீர் – அகர்கர் இடையே மோதல்
இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சாம்பியன்ஸ் டிராபி அணி அறிவிப்பின் பொழுது தங்களுடைய அணியின் முதல் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இருப்பார் என்று அறிவித்திருந்தார். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்று போட்டிகளிலும் விளையாடாத ஒரே வீரராக ரிஷப் பண்ட் மட்டுமே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பீர் தலைமையிலான இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து விக்கெட் கீப்பர் இடத்திற்கு இரண்டாவது விக்கெட் கீப்பரான கேஎல்.ராகுலை விரும்புகிறது. இதை இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்த விஷயத்தில் இருவருக்கும் நிறைய கருத்து வேற்றுமை அணி தேர்வின் போது இருந்ததாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஜெய்ஸ்வால் – ஸ்ரேயாஸ் ஐயர் விவகாரம்
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஜெய்ஸ்வாலை கம்பீர் விளையாட வைத்திருந்தார். விராட் கோலி விளையாடாத காரணத்தினால் மட்டுமே ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடினார். கம்பீர் இடது வலது காம்பினேஷனை தொடர்ந்து அமைக்க விரும்புவதாகவும், இதன் காரணமாக ஜெய்ஸ்வாலை விளையாட வைக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபியில் நீக்கம்.. அடுத்து ஜெய்ஸ்வாலுக்கு நடந்த இன்னொரு சோகம்.. என்ன நடந்தது?
எனவே அவர் மிடில் ஆர்டரை அமைப்பதில் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 3 போட்டிகளில் 60 ரன் சராசரியில் 181 ரன்கள் எடுத்து தன்னுடைய பார்மை நிரூபித்து விட்டார். இதிலும் தொடர்ந்து கருத்து வேற்றுமை இருவருக்குள்ளும் நிலவி வருவதாகவும் செய்திகள் கூறுகிறது. சமீப காலத்தில் இந்திய அணியின் கேப்டன், பயிற்சியாளர், தேர்வுக்குழு தலைவர் இடையே நல்ல புரிதல் இல்லை என்ற செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது!






