தற்போது இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு இன்னொரு சோகமான நிகழ்வும் நடந்திருக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் முதலில் இடம் பெற்ற ஜெய்ஸ்வால், இதைத்தொடர்ந்து அறிவிக்கப்பட்ட அணி மாற்றி அமைக்கப்பட்ட பொழுது நீக்கப்பட்டார். அவருடைய இடத்திற்கு மர்ம சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டிருக்கிறார்.
ஜெய்ஸ்வால் விஷயத்தில் நடக்கும் வினோதம்
இந்திய கிரிக்கெட் பேட்டிங் யூனிட்டின் எதிர்கால நட்சத்திர வீரராக ஜெய்ஸ்வால் பார்க்கப்படுகிறார். ஆனால் ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் தொடக்க ஆட்டக்காரராகவும் இருப்பதால் ஜெய்ஸ்வாலுக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. இறுதியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார்.
இந்த நிலையில் அந்த போட்டியில் அவர் சொற்ப ரன்னில் ஆட்டம் இழக்க ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான முறையில் விளையாடியிருந்தார். இதற்கு அடுத்த போட்டியில் விராட் கோலி வர ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டார். மேலும் சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
வெளியான முக்கிய அறிக்கை
இப்படியான சூழ்நிலையில் ஜெய்ஸ்வால் அடுத்து ரஞ்சி தொடரில் தனது மாநில மும்பை அணிக்காக அரை இறுதியில் களம் இறங்க முடிவு செய்து பயிற்சிகளில் ஈடுபட்டார். இந்த நிலையில் இன்று அவர் மும்பை அணிக்காக பயிற்சியில் ஈடுபட்ட பொழுது கணுக்காலில் ஏற்பட்டிருந்த பழைய காயம் மீண்டும் வலிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில் அவர் திடீரென மும்பை மாநில அணியில் இருந்தும் வெளியேறி பெங்களூர் செல்கிறார். மேலும் சாம்பியன்ஸ் டிராபி ரிசர்வ் பட்டியலில் இருந்தும் வெளியேறலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பேஸ்பால் மந்திரம் முடிவுக்கு வரணும்.. இங்கி கோச் இத செய்ய மாட்டார்னு பிளேயர்ஸ் உணரணும் – இங்கி முன்னாள் வீரர்
இது சம்பந்தமாக வெளியான செய்தியில் “கணுக்கால் காயத்தின் வலியில் அவதிப்பட்டு வரும் ஜெய்ஸ்வால் ரஞ்சி அரை இறுதி மும்பை அணியில் இருந்து வெளியேறுகிறார். இன்று பயிற்சிக்கு வந்த அவர் மும்பை அணியுடன் இணைந்து பயிற்சி செய்த பொழுது வலி இருப்பதை உணர்ந்தார். இது தொடர்ந்து அதிகரிக்க அவர் விலகுவது என்று முடிவு செய்தார். மேலும் அவர் பெங்களூரில் உள்ள பிசிசிஐ எக்ஸலன்ஸ் அமைப்புக்கு செல்ல இருக்கிறார்” என்று கூறப்பட்டிருக்கிறது.






