உலக கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆதிக்கம் செலுத்துவதற்கு மிக முக்கிய காரணமாக ஐபிஎல் தொடர் இருக்கிறது. இந்தத் தொடரின் வருமானத்தை நெருங்க உலகின் எந்த கிரிக்கெட் லீக்கும் கிடையாது. இந்த நிலையில் பிசிசிஐ இன்னொரு புதிய ஐபிஎல் தொடரை கொண்டுவர முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
முதன்முதலில் ஐபிஎல் மாடலில் ஐஎஸ்எல் என கபில்தேவ் ஆரம்பித்தார். பிறகு சுதாரித்துக் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை ஆரம்பித்தது. மேலும் கபில்தேவ் ஆரம்பித்த தொடரில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு விளையாட தடையும் விதித்தது.
இதற்கு அடுத்து தற்பொழுது ஐபிஎல் தொடர் உலகின் முதல் நிலை டி20 தொடராக உயர்ந்த நிற்கிறது. இதை அடுத்து இதில் வருமானத்தை பெரிய அளவில் பார்த்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் இதன் வடிவத்தில் இருக்கக்கூடிய எல்லாவற்றையும் தானே செய்வது என்கின்ற முடிவுக்கு வந்திருக்கிறது.
தற்போது ஓய்வு பெற்ற சர்வதேச வீரர்கள் லெஜெண்ட்ஸ் டி20 லீக் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் பல தொடர்களில் விளையாடி வருகிறார்கள். சமீபத்தில் இப்படி நடத்தப்பட்ட ஒரு தனியார் டி20 லீக்கில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி யூனுஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இதற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பும் இருந்தது.
இந்த நிலையில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஐபிஎல் மாடலில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்ட முன்னாள் வீரர்களை வைத்து டி20 தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது. மேலும் இதில் விளையாடக்கூடிய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று இருந்தால் மட்டும் போதாது, அவர்கள் ஐபிஎல் தொடரிலும் விளையாடாமல் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : நான் திரும்ப வரதுக்கு காரணம் சவுரவ் கங்குலிதான்.. ஐபிஎல் முக்கியமே கிடையாது – விர்த்திமான் சஹா பேச்சு
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும் பொழுது “இதுகுறித்து எங்களுக்கு முன்னால் வீரர்களிடமிருந்து ஒரு முன்மொழிவு கிடைத்திருக்கிறது. ஆனால் இது ஆரம்பகட்ட யோசனையில்தான் இருக்கிறது. இந்த ஆண்டு நடத்துவதற்கு சாத்தியம் கிடையாது. ஆனால் அடுத்த ஆண்டு நடத்துவது குறித்து பரிசீலிக்கலாம். இந்த டி20 லீக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று அதே சமயத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடாத வீரர்கள் விளையாடுவார்கள்” என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் தோனி ஐபிஎல் தொடரில் ஓய்வு பெற்று விட்டால் கூட, இந்தத் தொடரில் குறைந்தது 5 ஆண்டுகள் விளையாடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.