கேப்டன் பதவி என் பேட்டிங்கை வேற லெவலுக்கு கொண்டு போகும்.. இந்திய அணி பற்றி கவலை இல்லை – படிக்கல் பேட்டி

0
0

​ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணியை வழிநடத்தவுள்ள இளம் பேட்டர் தேவதத் படிக்கல், கேப்டன்ஷிப் பொறுப்பு தனது பேட்டிங்கை மேலும் சிறப்பாக மாற்ற உதவுகிறது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

​இந்திய டெஸ்ட் அணியில் நம்பர் 3 இடத்தில் விளையாடி சிறப்பாக ரன்கள் குவித்து வரும் படிக்கல், புதுச்சேரியில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடரில் கேப்டனாக செயல்படவுள்ளார். தலைமைப் பொறுப்பு தனக்கு கூடுதல் சுமையைக் கொடுக்காமல், அணியை வெற்றி பெறச் செய்யும் கவனத்தை அதிகரிப்பதாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

​இந்தியா ஏ அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து தேவதத் படிக்கல் பேசும்போது “இந்தியா ஏ அணியின் கேப்டனாக செயல்படுவது எனக்கு கிடைத்த மிகச்சிறந்த ஆப்பர்சூனிட்டி. கடந்த சீசனில் கர்நாடகா அணிக்கு கேப்டனாக செயல்பட்ட அனுபவம் எனக்கு ஒரு சிறந்த லேர்னிங் கர்வ் ஆக இருந்தது. கேப்டன்ஷிப் என்பது அணிக்கு உதவி செய்யக்கூடிய ஒரு கூடுதல் ரெஸ்பான்சிபிலிட்டி மட்டுமே” என்று கூறி இருக்கிறார்.

​மேலும் தொடர்ந்து பேசுகையில் “நான் எப்போதும் அணி வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே போகஸ் உடன்தான் கிரிக்கெட் விளையாடுவேன். கேப்டனாக செயல்படும்போது அணியை ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகி, அது எனது பேட்டிங்கை மேலும் இம்ப்ரூவ் செய்ய ஹெல்ப் பண்ணுகிறது. இந்திய அணியில் பிளேஸ் பெறுவதற்கு எப்போதும் டஃப் காம்படீஷன் இருக்கும், அதைப்பற்றி யோசிக்காமல் பேட்டிங்கை என்ஜாய் செய்து ரன்கள் குவிப்பதே எனது நோக்கம்” என்று கூறி முடித்துள்ளார்.

- Advertisement -
- Advertisement -