ஜிம்பாப்வே தொடரில் கில்லை வைத்து பிசிசிஐ புதிய திட்டம்.. ருதுராஜுக்கு இனி வாய்ப்பே கிடையாதா?.. வெளியான புதிய தகவல்கள்

0
217
Gill

தற்பொழுது உலக கிரிக்கெட்டில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த மாத இறுதி உடன் இந்த தொடர் முடிவடைந்ததும், அனைத்து அணிகளும் தங்களின் அட்டவணைகளுக்கு திரும்புகின்றன. இந்த வகையில் இந்திய அணி ஜூலை மாத முதல் வாரத்தில் ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடருக்கு ஹர்திக் பாண்டியா இல்லை சூரியகுமார் யாதவ் இருவரில் ஒருவர் செல்வார்கள் எனவும், எனவே இவர்களில் இருவரில் ஒருவரே கேப்டனாகவும் அணியை வழிநடத்துவார்கள் எனவும் இதுகுறித்து முன்பு வந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

தற்போது இதில் ஒரு திருப்பமாக சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவருமே ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு செல்லாமல் ஓய்வெடுக்க விரும்பியதாக பிசிசிஐ இடம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் விராட் கோலி ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, சிராஜ் போன்ற வீரர்களும் ஓய்வு எடுப்பார்கள் எனத் தெரிய வருகிறது.

இதன் காரணமாக பிசிசிஐ எதிர்கால இந்திய கிரிக்கெட்டை கருத்தில் வைத்து முக்கிய முடிவை எடுத்திருக்கிறது. இதன்படி ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு சுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாகவும் சுக்குமன் கில்லையே பிசிசிஐ விரும்புவதாக புரிந்து கொள்ள முடிகிறது.

கடந்த ஒரு வருடத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் என இரண்டிலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் சிறந்த முறையில் இருந்து வருகிறார். அப்படி இருந்தும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நல்ல ஃபார்மில் இல்லாத சுப்மன் கில்லை ரிசர்வ் வீரராக டி20 உலகக் கோப்பைக்கு பிசிசிஐ அழைத்துச் சென்றது.

- Advertisement -

இதையும் படிங்க:

மேலும் ஜிம்பாப்வே தொடருக்கும் ஜெய்ஸ்வால், அபிஷேக் ஷர்மா மற்றும் கில் என மூன்று துவக்க ஆட்டக்காரர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிய வருகிறது. இந்த நிலையில் இந்த அணியில் கூட ருதுராஜ் தேர்ந்தெடுக்கப்படாமல் போவதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. பிசிசிஐ சுப்மன் கில்லை உருவாக்குவதற்காக ருதுராஜ் பலி கொடுக்கப்படுகிறார் என தற்பொழுது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.