சாம்சனை தரோம்.. இந்த 2 வீரர்களை தாங்க.. சிஎஸ்கேவிடம் ராஜஸ்தான் வைத்த கோரிக்கை.. ரசிகர்கள் கவலை

0
53
Sanju

அடுத்த மாதத்தில் ஐபிஎல் மினி ஏலம் நடக்க இருக்கின்ற காரணத்தினால் வீரர்களை அதற்கு முன்பாக டிரேடிங் செய்வது குறித்தான செய்திகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் ராஜஸ்தான் அணியிடமிருந்து சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்குவது பெரிய செய்தியாக இருக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் சரியான வீரர்களை வாங்காத காரணத்தினால், புள்ளி பட்டியலில் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக பத்தாவது இடத்தை பிடித்து படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக தற்போது அணியை மறு உருவாக்கம் செய்வதற்கு நிறைய முயற்சிகளை எடுத்து வருகிறது.

- Advertisement -

சஞ்சு சாம்சன் டிரேடிங்

சிஎஸ்கே அணியில் மகேந்திர சிங் தோனிக்கு அடுத்து விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சனை வாங்குவதற்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் கடுமையான முயற்சிகள் செய்து வருகிறது. நாளை ருதுராஜ் இடத்தில் அவரை கேப்டனாக நியமிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

மேலும் இன்னொரு செய்தியாக சிஎஸ்கே அணி தங்களிடமிருந்து எந்த ஒரு வீரரையும் தராமல், சஞ்சு சாம்சனை நேரடியாக 18 கோடி ரூபாய் பணம் மட்டும் கொடுத்து ராஜஸ்தான் அணியிடம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

- Advertisement -

இந்த இரண்டு வீரர்கள் வேண்டும்

தற்போது இன்னொரு முக்கிய செய்தியாக சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணிக்கு தருவதற்கு அந்த அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் இளம் அதிரடி வெளிநாட்டு வீரர் டிவால்ட் பிரிவிஸ் இருவரையும் தர வேண்டும் என ராஜஸ்தான் அணி நிர்வாகம் கேட்டுள்ளதாக செய்திகள் கூறுகிறது.

இதையும் படிங்க : முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம்.. ரஞ்சி போட்டியில் 11 பந்தில் 50 அடித்த மேகாலய வீரர் ஆகாஷ்.. ஒரே ஓவரில் 6 சிக்சர்

சிஎஸ்கே அணி நிர்வாகம் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டால் அது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை உண்டாக்கும் எனவும், சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு தேவையில்லை எனவும் சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அடுத்த வாரம் இது குறித்து முழுவதுமாக தெரிந்து விடும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -