முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம்.. ரஞ்சி போட்டியில் 11 பந்தில் 50 அடித்த மேகாலய வீரர் ஆகாஷ்.. ஒரே ஓவரில் 6 சிக்சர்

0
71

மேகாலய அணியின் பேட்ஸ்மேன் ஆகாஷ் குமார் சௌத்ரி, முதல் தர கிரிக்கெட்டில் வேகமாக அரைசதம் அடித்து வரலாற்றில் இடம்பிடித்தார். வெறும் 11 பந்துகளில் இந்த உலக சாதனையை நிகழ்த்தினார். இது மேகாலயாவின் ரஞ்சி டிராபி பிளேட் குரூப் போட்டியில் அருணாச்சல பிரதேசத்துக்கு எதிராக சூரத்தின் சி.கே. பிதாவாலா மைதானத்தில் நடந்த போட்டியின் போது படைக்கப்பட்டதாகும்.

ரஞ்சி டிராபி பிளேட் குரூப் தற்போது சாதனைகள் உருவாகும் மேடையாக மாறியுள்ளது. பீகாரின் வைபவ் சூர்யவம்ஷி ரஞ்சி போட்டியில் ஆடிய இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றது முதல், கோவாவின் கஷ்யப் பக்லே மற்றும் ஸ்னேஹல் கௌதன்கர் ஆகியோர் 606 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிகபட்ச பார்ட்னர்ஷிப் சாதனை படைத்தது வரை இந்த டிவிஷன் தொடர்ந்து அபார சாதனைகளை உருவாக்கி வருகிறது.

- Advertisement -

ஒரே ஓவரில் 6 சிகசர்:

இதற்கிடையே ஆகாஷ், ரஞ்சி டிராபி சாதனையை மட்டுமல்லாமல் உலக பர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டின் வேகமான அரைசதம் சாதனையையும் முறியடித்தார். மேகாலயாவின் முதல் இன்னிங்ஸ் இறுதியில் களமிறங்கிய ஆகாஷ், அருணாச்சல பிரதேச பந்துவீச்சை துவம்சம் செய்தார். வெறும் 11 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.

இது இங்கிலாந்தின் வெய்ன் வைட் 2012-ல் லெய்செஸ்டர்ஷையருக்காக எசெக்ஸுக்கு எதிராக 12 பந்துகளில் அடித்த முந்தைய சாதனையை முறியடித்தது. ஆகாஷ் 14 பந்துகளில் 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் தொடர்ச்சியாக எட்டு சிக்சர்கள் அடங்கும், ஒரு ஓவரில் ஆறு சிக்சர்களும் அடங்கும்.

- Advertisement -

அதிவேக அரைசதம் அடித்தவர் பட்டியல்:

அவரது அதிரடி ஆட்டத்தால் மேகாலயா 628-6 ரன்களுக்கு இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதற்கு முன்பு இன்னிங்ஸில் மேகாலயாவின் அர்பித் படேவரா 207 ரன்கள் மற்றும் ஆர். தலால் 144 ரன்கள் எடுத்து ஆகியோர் அதிரடியாக ஆடினர். ஆனால் ஆகாஷின் கேமியோவே ஸ்கோரை 600 ரன்களை தாண்ட வைத்தது.

இதையும் படிங்க: துருவ் ஜூரலுக்காக சாய் சுதர்சனை நீக்கனுமா? புதிய ஐடியாவை தந்த ஆகாஷ் சோப்ரா.. கேட்பாரா கம்பீர்

ஆகாஷின் சாதனை இப்போது பர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டின் வேகமான அரைசதங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் வேகமான அரைசதங்கள்: 11 பந்துகள் – ஆகாஷ் குமார் சௌத்ரி (மேகாலயா vs அருணாச்சல பிரதேசம், சூரத், 2025) 12 பந்துகள் – வெய்ன் வைட் (லெய்செஸ்டர்ஷயர் vs எசெக்ஸ், 2012) 13 பந்துகள் – மைக்கேல் வான் வூரன் (ஈஸ்டர்ன் பிராவின்ஸ் B vs கிரிக்வாலாண்ட் வெஸ்ட், 1984-85) 14 பந்துகள் – நெட் எக்கர்ஸ்லி (லெய்செஸ்டர்ஷயர் vs எசெக்ஸ், 2012) 15 பந்துகள், பந்தீப் சிங் (ஜம்மு & காஷ்மீர் vs திரிபுரா, 2015-16)

- Advertisement -