இந்திய கிரிக்கெட்

ஜெய்ஸ்வால் கேட்ச் மிஸ்.. கம்பீர் கொடுத்த தண்டனை.. தமிழக வீரருக்கு வாய்ப்பு.. வெளியான தகவல்கள்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் ஐந்து கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டதற்கு தலைமை பயிற்சியாளர் கம்பீர் தண்டித்திருப்பதாக செய்திகள் தெரிவித்து இருக்கிறது.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியின் போது ஜெய்ஸ்வால் கல்லி பொசிஷனில் நிற்கவைக்கப்பட்டிருந்தால். இங்கு கிடைத்த நான்கு கேட்ச் வாய்ப்புகளை அவர் தவறவிட்டார். மேலும் வெளியில் நிற்கவைக்கப்பட்ட பொழுதும் ஒரு கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். இவருடைய கேட்ச் வாய்ப்பில் தப்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எல்லோரும் பெரிய ரன் எடுத்தார்கள். இந்த அடிப்படையில் ஜெய்ஸ்வால் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.

கில் மீதான விமர்சனம்

இந்த நிலையில் தொடர்ந்து ஜெய்ஸ்வால் கேட்ச் வாய்ப்பை தவற விட்டுக் கொண்டிருந்த பொழுது கேப்டன் அவரை ஸ்லிப் பகுதியில் இருந்து மாற்றி நிற்க வைக்கவில்லை. இதன் காரணமாக கில் மீது முதல் டெஸ்டின் போது சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய அளவில் எதற்காக விமர்சனத்தை முன்வைத்து வந்தார்கள்.

எனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இதற்கு மாற்றமாக என்ன செய்யப் போகிறார்கள்? என்கின்ற பெரிய கேள்வி இருந்தது. மேலும் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப்பை நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளரை தேடும் பொழுது சரியானவர்கள் கிடைக்காததால், மீண்டும் அவரையே நியமித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கம்பீர் கொடுத்த தண்டனை

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பீல்டிங் பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது ஸ்லிப் பகுதியில் ஜெய்ஸ்வால் பில்டிங் நிறுத்தப்படவில்லை. அவர் பாயிண்ட் மற்றும் ஷார்ட் லெக் என இரண்டு பொசிஷன்களில் மட்டுமே ஃபீல்டிங் பயிற்சி செய்தார். இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்லிப் பகுதியில் ஜெயஸ்வால் நிற்க மாட்டார் என்பது தெரிகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் செய்ததற்கு கம்பீர் தண்டித்திருக்கிறார்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட்டை அப்படியே விட மாட்டோம்.. முன்னாடியே வெளிய அனுப்ப அந்த வேலை நடக்கும் – வோக்ஸ் சவால்

அதே சமயத்தில் ஜெய்ஸ்வால் இடத்தை நிரப்புவதற்கு தமிழகத்தின் சாய் சுதர்சன் ஸ்லீப் பகுதியில் ஃபீல்டிங் செய்வதை பார்க்க முடிந்தது. இதன் மூலம் அவர் இரண்டாவது டெஸ்டில் விளையாடுகிறார் என்பதும், மேலும் அவரே அந்த பகுதியில் ஃபீல்டிங் நிற்கப் போகிறார் என்பதும் உறுதியாகி இருக்கிறது.

- Advertisement -
Published by

Recent Posts