ரிஷப் பண்ட்டை அப்படியே விட மாட்டோம்.. முன்னாடியே வெளிய அனுப்ப அந்த வேலை நடக்கும் – வோக்ஸ் சவால்

0
17
Rishabh

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர் ரிஷப் பண்ட்டை முன்கூட்டியே அவுட் செய்வோம் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்திருந்தார். அவரைக் கட்டுப்படுத்துவது இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு பெரிய சவாலாக அமைந்திருந்தது.

- Advertisement -

ரிஷப் பண்டின் புதிய வியூகம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷபன்ட் முதல் ஓவரில் தாக்கியாடி ஒன்று இரண்டு பவுண்டர்களை எடுத்து, அதற்குப் பிறகு நடுவில் மொத்தமாக தடுப்பாட்டத்திற்குள் சென்று விடுகிறார். பின்பு இறுதிக் கட்டத்தில் பந்துவீச்சாளர்கள் சோர்வடைந்ததும் தாக்க ஆரம்பிக்கிறார். இதன் காரணமாக அவரது விக்கெட்டை கைப்பற்றுவது இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் அவர் புத்திசாலித்தனமான ரிஸ்க் எடுத்த காரணத்தினால் துணை கேப்டனுக்கான பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறார் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் நாளை மறுநாள் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டை அப்படியே விட்டுவிட மாட்டோம் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நாங்கள் நிச்சயம் பேசுவோம்

இதுகுறித்து கிறிஸ் வோக்ஸ் கூறும்பொழுது “ரிஷப் பண்ட் உடன் உங்களுக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாது. அவர் உங்களை மிகவும் உற்சாகமாக வைத்திருக்கும் ஒரு வீரர். சில சமயங்களில் அவருக்கு எதிராக பந்து வீசவும் உற்சாகப்படுத்துவார். சில சமயங்களில் ஒரு பவுலராக உங்களைப் பின்தங்கிய நிலைக்கு கொண்டு போய் விடுவார்”

இதையும் படிங்க : 2வது டெஸ்ட்.. இங்கி பிளேயிங் XI அறிவிப்பு.. தைரிய முடிவு.. ஸ்டார் வீரருக்கு இடமில்லை.. இந்திய அணிக்கு வாய்ப்பு

“அவர் களத்தில் இருக்கும் பொழுது நாம் ஆட்டத்தில் இருப்பது எப்போதும் உற்சாகம் தரக்கூடியது. அவர் முதல் டெஸ்டில் இரண்டு சதங்கள் அடித்திருக்கிறார். ஆனால் இரண்டாவது டெஸ்டில் அவரை முன்கூட்டியே அவுட் செய்வோம் என்று நம்புகிறேன். எங்களுடைய பவுலிங் யூனிட் இன்னும் சந்தித்துக் கொள்ளவில்லை. ஆனால் நிச்சயம் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் குறித்து நாங்கள் விவாதிப்போம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -