எதிர்கால சிஎஸ்கேவுக்காக.. தோனி இப்பவே உருவாக்கிய மாஸ்டர் பிளான்.. ஓய்வு பெறுகிறாரா?.. முழு விவரங்கள்

0
116
Dh

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்திருக்கிறது. இதன் காரணமாக இப்பொழுதே எதிர்கால சிஎஸ்கே அணிய உருவாக்க தோனி புத்திசாலித்தனமாக முயற்சிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆண்டு அவசரமாக தோனி இப்படியான காரியத்தில் ஈடுபட்டு இருப்பதால் அவர் அடுத்த ஆண்டு விளையாட மாட்டார் என்றும் ஓய்வு பெற போகிறார் என்றும் செய்திகள் கூறுகிறது. மேலும் தோனி நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் தலையிடாததை இது காட்டுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

இளம் வீரர்கள் வருகை

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி நிர்வாகம் உடனுக்குடனே இளம் வீரர்களை புதிதாக அணிக்குள் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. மேலும் காயம் என்ற பெயரில் ஒரு பக்கம் வீரர்கள் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்தின் குல்ஜப்னித்சிங் மற்றும் வன்ஸ் பேட்டி ஆகியோர் காயத்தால் திடீரென வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது எல்லாமே தோனியின் புத்திசாலித்தனமான திட்டங்கள் என்று சொல்லப்பட்டு வருகிறது. டிவால்ட் பிரிவிஸ் உள்ளே வருவதற்காக குல்ஜப்னித் சிங் காயம் என்று வெளியே சென்றார். அடுத்து அவர் பயிற்சி போட்டிகளில் விளையாடியதாக சொல்லப்படுகிறது. தற்போது விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் உர்வில் படேல், வன்ஸ் பேடிக்கு காயம் என்று அறிவிக்கப்பட்ட உடனே சிஎஸ்கே அணியில் இணைந்திருக்கிறார்.

- Advertisement -

என்ன திட்டம் நடக்கிறது?

தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகமும் தோனியும் அடுத்த ஆண்டு மினி ஏலத்திற்கு செல்வதற்கு முன்பாகவே, ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கும் பொழுதே வீரர்களின் காயத்திற்கு மாற்று வீரர்களை எடுப்பதை வைத்து முழு அணியை உருவாக்கி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து வருவது தெரிகிறது. தற்பொழுது தோனியை நேரடியாக வீரர்களை பயிற்சியில் பார்த்து முடிவு செய்வதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற, இன்னும் எத்தனை போட்டிகளை வெல்ல வேண்டும்

இந்த ஆண்டு தோனி எதிர்கால அணியை அமைக்க இவ்வளவு அவசரம் காட்டுவது அவர் ஓய்வு பெற போகிறார் என்பதை குறிப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயத்தில் ஒரு தரப்பினர் தோனி வலிமையான அணியை உருவாக்கி அடுத்த ஆண்டும் விளையாடுவார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் சிஎஸ்கே மற்றும் தோனி மினி ஏலத்திற்கு செல்லாமலே அணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருவது உண்மையாகவே தெரிகிறது!

- Advertisement -