ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் இதுவரை மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுவாய்ப்பை இழந்திருக்கிறது. இதில் முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டாவது அணியாக ராஜஸ்தானும் மூன்றாவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் தொடரை விட்டு இழந்துவிட்டது.
இந்த நிலையில் டாப் நான்கு இடங்களை பிடிக்கப் போகும் அணி எது? பிளே ஆப் சுற்றுக்கு செல்ல இன்னும் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆர்சிபி அணி இன்னும் மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.
பிளே ஆப் வாய்ப்பு யாருக்கு?
இரண்டாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியும் எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். அதேபோன்று மூன்றாவது இடத்தில் இருக்கும் மும்பை அணி மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.
குஜராத் அணிக்கு இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சி இருக்கிறது. இதில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால்,அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். இதேபோன்று டெல்லி அணி மூன்று போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் இரண்டு போட்டிகளில் வெல்ல வேண்டும். தற்போது புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி விளையாடப் போகும் மூன்று ஆட்டங்களிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு இருக்கிறது.
இன்று முக்கிய போட்டி:
தற்போது புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் லக்னோ அணி அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும். அதேசமயம் மற்ற அணிகளின் தயவு கிடைத்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலையில் இருக்கின்றது. எட்டாவது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஒன்பதாவது இடத்தில் ராஜஸ்தான் இருக்கும். பத்தாவது இடத்தில் சிஎஸ்கே உள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஒவரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் யார்?
இந்த சூழலில் இன்று குஜராத் மற்றும் மும்பை அணிக்கு இடையிலான போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது இதேபோன்று கடைசி இடத்தில் யார் இருக்கப் போகிறார்கள் என்று கேள்வியும் எழுந்துள்ளது அந்த வகையில் சி எஸ் கே, ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.






