முக்கிய 3 இந்திய வீரர்களுக்கு ஓய்வு.. இலங்கை ரசிகர்கள் நிம்மதி.. வெளியான பின்னணி காரணம்

0
5638
BCCI

இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் கடந்த வாரம் வெஸ்ட் இண்டிசில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியது. தற்போது அடுத்தடுத்து தொடர்கள் இந்திய அணிக்கு வர இருக்கின்ற நிலையில், சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது.

இந்திய அணி தற்போது சுப்மன் கில் தலைமையில் ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. இந்தத் தொடர் வருகின்ற ஜூலை 14 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இந்திய அணி ஜூலை 27ஆம் தேதி இலங்கைக்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

இதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுவதற்கு மிகவும் முக்கியமான தொடராக அமைகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து ரோஹித் சர்மா விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது. இதற்கு அடுத்து தொடர்ந்து இந்திய அணிக்கு முக்கிய போட்டிகள் இருக்கின்ற காரணத்தினால், உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான செப்டம்பரில் நடக்கும் டெஸ்ட் மற்றும் டி20 தொடருக்கு இந்த வீரர்கள் திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. டி20 தொடருக்கு பும்ரா திரும்புவார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டார்கள்.

இதையும் படிங்க : சேலம் பசங்க காட்டிய பிரில்லியன்ஸ்.. திகைத்து நின்ற அஸ்வின் வருண்.. திண்டுக்கல் அணி தோல்வி.. டிஎன்பிஎல் 2024

இந்த நிலையில் இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசும் பொழுது “மூத்த வீரர்கள் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு அடுத்து வரவிருக்கின்ற முழு சீசனுக்கும் தயாராகலாம். செப்டம்பர் மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா மூன்று பேரும் இணைவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -